Published : Nov 09, 2024, 01:33 PM ISTUpdated : Nov 09, 2024, 01:38 PM IST
Cleaning Mop Tips : நீங்கள் வீட்டை துடைக்க பயன்படுத்தப்படும் மாப்பை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். எனவே மாப்பை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டை ரொம்பவே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். முன்பெல்லாம் வீட்டை துடைப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி அல்ல. மாப் உதவியுடன் மிகவும் எளிதாக சுத்தம் செய்து விடலாம்.
25
Cleaning Mop Tips In Tamil
ஒவ்வொரு முறையும் நீங்கள் வீட்டை துடைப்பதற்கு மாப்பை பயன்படுத்தும் போது அதை தவறாமல் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இல்லையெனில், அதில் கருப்பு அச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும். அதுமட்டுமின்றி அதன் ஆயுளும் நீடிக்காது.
ஆனால் நீங்கள் உங்களது மாப்பை எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் விடாப்பிடியான அழுக்கு மற்றும் கறைகள் போகவில்லையா? இதற்கு சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் மட்டும் போதும். உங்களது மாப்பை மிக எளிதாக சுத்தம் செய்து விடலாம்.
எளிதாக சுத்தம் செய்வதற்கு வினிகர் உங்களுக்கு உதவும். இதற்கு ஒரு வாளியில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது உங்களது அழுக்கான மாப்பை அதில் சுமார் 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு ஓடும் தண்ணீரில் மாப்பை நன்கு அலசுங்கள். இப்படி செய்வதன் மூலம் மாப்பில் உள்ள எண்ணெய் கறை, கிரீஸ் போன்றவை இருந்த தடயங்கள் இப்போது இல்லாமல் இருக்கும்.
மாப்பில் இருக்கும் விடாப்பிடியான கறை அல்லது அழுக்கை போக்க, ஒரு வழியில் சூடான நீரை நிரப்பி அதில் ஒன்று அல்லது இரண்டு எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு மாப்பை அதில் சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும். எலுமிச்சையின் அமிலத்தன்மை மாப்பில் இருக்கும் அழுக்கை சுலபமாக நீக்கும். அதே சமயம் அதன் சிட்ரஸ் வாசனை மாப்பிற்கு புத்துணர்சியூட்டும் வாசனையை கொடுக்கும்.
வேண்டுமானால் நீங்கள் உங்கள் கைகளால் மாப்பை நன்றாக ஸ்கிரப் செய்யவும். பிறகு ஓடும் நேரில் மாப்பை நன்றாக கழுவி, வெயிலில் காய வைக்கவும். இப்போது பார்த்தால் உங்களது மாப்பில் இருக்கும் கறைகள் நீங்கி வாசனையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
55
Cleaning Mop Tips In Tamil
டிஷ் சோப்பு
இதற்கு ஒரு வழியில் சூடான தண்ணீரை நிரப்பி, அதில் திரவ சோப்பு அல்லது சலவை சோப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அதில் மாப்பை சுமார் 10 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து தண்ணீரில் நன்கு அலசி காய வைத்து, பின் எப்போதும் போல பயன்படுத்தலாம்.