attached bathroom
எனவே, நீங்கள் பணத்தை மிச்சப்படுத்தி உங்கள் வீட்டின் பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமா..? அதற்கு நீங்கள் வெறும் ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும். உங்கள் வீட்டு பாத்ரூம் எப்போதும் நோய்க் கிருமிகள் இன்றி சுத்தமாகவும், வைரம் போல் பளிச் என்று மின்னும்.
attached bathroom
நம்முடைய வீடுகளில் இருக்கும் உப்பு தண்ணீரினால் அதிக அளவு உப்பு கறையும், பாசியும் படிந்து கழிவறையை சுத்தம் செய்வதை கடினம் ஆக்கிவிட்டது. எனவே, உங்கள் வீட்டு கழிவறை மற்றும் குளியலறையை தினமும் சுத்தம் செய்யவில்லை என்றாலும், வாரம் ஒரு முறையாவது நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும்.
attached bathroom
அதற்கு நீங்கள் கடைக்கு சென்று 1 ரூபாய் ஷாம்பூ ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். அதை அரை பக்கெட் அளவிற்கு தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர், இந்த தண்ணீரை ஒரு முறை நுரை வர கலக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கில் எடுத்து எல்லா இடங்களிலும் ஊற்றி ஒரு முறை பிரஸ் அல்லது துடைப்பத்தை வைத்து நன்கு தேய்த்து விடுங்கள்.பின்னர், சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், பாத்ரூம் நல்ல வாசனையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.