உங்கள் துணை உங்களிடம் மைண்ட் கேம்களை விளையாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள் இதோ..

First Published | Dec 15, 2023, 5:20 PM IST

தங்கள் துணையை தங்கள் சுயநலத்திற்காக கையாளும் நபர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகரமான கையாளுதலைப் பயன்படுத்துகிறார்கள்,

ஒரு உறவில் உங்கள் துணை உங்களை தங்கள் சுயநலத்திற்காக கையாள்கிறாரா என்பது கண்டறிவது கடினம். அதாவது உங்கள் துணை அடிக்கடி குற்ற உணர்வை ஏற்படுத்துதல், உங்கள் மீது பழி சுமத்துதல் அல்லது அவர்களின் நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றினால்  இவை சிவப்புக் கொடிகளாக இருக்கலாம்.

தங்கள் துணையை தங்கள் சுயநலத்திற்காக கையாளும் நபர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகரமான கையாளுதலைப் பயன்படுத்துகிறார்கள், மன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள், மேலும் உங்களை அதிகமாக கட்டுப்படுத்த நினைக்கலாம்.

Tap to resize

எனவே ஆரோக்கியமான உறவைப் பேண உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் மற்றும் வெளிப்படையாகப் பேசுங்கள். உங்கள் துணை உங்களை தவறாக கையாள்கிறாரா என்பதை குறிக்கும் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்காலாம். 

உங்கள் துணை உங்கள் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், வேறு விஷயங்களுக்கு திசை திருப்பினால் அவர் மைண்ட் கேம்களை விளையாடுகிறார், மேலும் உங்களைக் கையாள முயற்சிக்கிறார் என்பதை குறிக்கும் அறிகுறியாகும். அல்லது உங்கள் துணையின் தவறை நீங்கள் சுட்டிக் காட்டும்போது சண்டையிடத் தொடங்கும் போது, அவர்கள் மன விளையாட்டுகளை விளையாடி உங்களைக் கையாளுகிறார்கள்

உங்கள் துணை திடீரென்று உங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, நீங்கள் அவருக்கு அதிக கவனம் செலுத்தும்போது இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, அவர்கள் மனதைக் கையாள்கிறார்கள் மற்றும் உங்களைக் கையாளுகிறார்கள் என்று அர்த்தம். உங்கள் துணை உங்களை ஏமாற்றி அவர்களின் விதிமுறைகளை உங்களை ஏற்றுக்கொள்ளும்படி வைத்தால், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். மேலும் உங்கள் துணை அவர்களின் எண்ணத்தை அவர்களின் குடும்பம் அல்லது பெற்றோரின் எண்ணங்களாக சித்தரித்தால், அவர்கள் உங்களை கையாள முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்.

நீங்கள் உங்களுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்று அவர்கள் உணரும்போது உங்களை குற்றம்சாட்டினால்,  அவர்கள் உங்களை அவர்கள் மீது அதிகம் சார்ந்திருக்கச் செய்கிறார்கள், மேலும் இந்தச் சார்புநிலையைப் பயன்படுத்தி மைண்ட் கேம்களை விளையாடவும், தேவைப்படும் போதெல்லாம் உங்களைக் கையாளவும் உதவும்

உங்கள் பலவீனமான புள்ளியை பயன்படுத்தி, அவர்கள் விரும்பும் செயல்களை உங்களை செய்ய வைத்தால் அல்லது உங்களைக் கட்டுப்படுத்த விரும்பினால் அவர் உங்களை கையாள்கிறார் என்று அர்த்தம். உங்கள் துணை உங்கள் கடந்த கால சம்பவங்களை மீண்டும் கொண்டு வந்து குற்றம்சாட்டினால் அது டாக்ஸிக் அறிகுறியாகும்.

நீங்கள் மோசமாக நடந்துக்கொள்வதால் தான் உங்கள் துணை தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள். அதாவது உங்கள் மீது பழிசுமத்தி அவர்களின் தவறுகளில் இருந்து விடுபடுகிறார்கள். உங்கள் சுய மதிப்பு மற்றும் முன்னேற்றத்தை சந்தேகிக்க வைத்தால், அவர்கள் உங்களுடன் மைண்ட் கேம்களை விளையாட முயற்சிக்கிறார்கள்.

ஒரு நபர் பழிவாங்கும் விளையாட்டை விளையாட முனைந்தால் முயற்சித்தால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் - நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் ஒரு நபர் எப்போதும் உங்கள் கடந்த கால தவறுகளையும் கடந்த கால உறவுகளையும் தூண்டினால், அது சிவப்பு எச்சரிக்கை. எனவே கவனமாக இருப்பது அவசியம்..

Latest Videos

click me!