நீங்களும் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்ல தான் சாப்பிடுறீங்களா? இந்த பிரச்சினைகள் வரலாம் ஜாக்கிரதை!!
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது பள்ளி, கல்லூரி செல்பவர்கள் இருந்தாலும் சரி, அலுவலகத்திற்கு செல்பவராக இருந்தாலும் சரி கலர் கலர் பிளாஸ்டிக் பாக்ஸில் தான் மதிய உணவை எடுத்து செல்கிறோம். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு விதவிதமான, அவர்கள் விரும்பும் பொம்மைகள் காட்டி அவர்களது மனதை மயக்கி அதை வாங்க தூண்டும் விதமாக இருக்கிறது. அது தீமை என்று தெரிந்தும் பெற்றோர்கள் குழந்தைகள் அடம் பிடிப்பதால் அவர்களுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் எவ்வாறு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை இப்போது அறிந்து கொள்ளலாம்.
25
பிளாஸ்டிக் டப்பாவின் தரம்:
சமையலறையில் இருக்கும் மசாலா முதல் மதிய உணவு வரை என அனைத்திற்கும் பிளாஸ்டிக் பாக்ஸ் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் BPA என்ற வேதிப் பொருளின் பயன்பாடு தான் அதிகமாக இருக்கிறது. இது மனித உடலுக்கு ரொம்பவே ஆபத்து என்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றன. இது இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் ஹார்மோன் சுரப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். BPA இல்லாமல் எந்த ஒரு பிளாஸ்டிக் பொருட்களையும் தயாரிக்க முடியாது. ஆனால் இவற்றின் அதிகப்படியான பயன்பாடு நம் உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
35
சூடான உணவு:
காலையில் சமைத்த சூடான உணவை பிளாஸ்டிக் பாக்ஸில் வைக்கும் போது அதில் இருக்கும் BPA வெளியேறி உணவுடன் கலந்து விடுகிறது. அந்த உணவை நான் சாப்பிடும் போது, அது உடலில் சேரும்போது அவை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இது தவிர உணவின் வாசனை மற்றும் நிறத்தை மாற்றிவிடும்..
1. பிளாஸ்டிக் பாக்ஸுக்கு பதிலாக எவர்சில்வர் என்று உலகத்தலான லஞ்ச் பாக்ஸை பயன்படுத்துங்கள்.
2. முக்கியமாக தண்ணீர் பாட்டிலுக்கு எவர்சில்வர் அல்லது செம்பு உலோகத்தால் ஆன வாட்டர் பாட்டிலை வாங்கி பயன்படுத்தலாம். அதுபோல கண்ணாடி பாட்டில்களையும் பயன்படுத்தலாம்.
குறிப்பு : கருவுற்ற பெண்கள் பிளாஸ்டிக் பாக்ஸ்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றை பயன்படுத்தும் போது அதில் இருக்கும் ரசாயனம் உங்கள் மூலமாக வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சென்று மோசமான விளைவை ஏற்படுத்தி விடும்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.