ஆகவே பாதாமை ஊறவைத்து தோலுரித்த பின் உண்ண வேண்டும். தோலுரித்த பாதாமாக இருந்தாலும் உடலுக்கு நல்லது தான். ஒருவேளை செரிமான பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் தோலுரிக்காமல் கூட பாதாமை யார் வேண்டுமானாலும் உண்ணலாம்.
பாதாமின் தோலுரிக்க பொதுவான காரணங்கள்:
பாதாமின் தோலில் அமிக்டலின் காணப்படுகிறது. இது கசப்பான சுவையைத் தரக்கூடியது. தோலுரிக்கும் போது இந்த கசப்பு சுவை நீங்கிவிடுகிறது. ஆகவே சாப்பிட இனிமையாக இருக்கும்.
பாதாமின் தோல் கடினமானது. இதனை சிலரால் ஜீரணிக்க முடியாது. தோலை உரித்தால் எளிதில் ஜீரணமாகும்.
பாதம் தோலில் பைடிக் என்ற அமிலம் காணப்படும். அது ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும். ஆகவே தோலை உரித்தால் பைடிக் அமிலம் குறையும். இதனால் வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதை ஊக்கப்படுத்தும். இதனால் பாதாமை தோலுரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
பாதாம் தோலுரித்தால் மென்மையாக இருக்கும். அதை உண்ணும்போது சுவையாக இருக்கும்.