வெள்ளரிக்காய் பழமா? காயா?

First Published Sep 13, 2024, 2:10 PM IST

வெள்ளரிக்காய் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று சொல்ல வேண்டியது இல்லை. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது பச்சையாக இருப்பதால், இதை காய் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இது காய் வகையைச் சார்ந்ததா? என்று பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் பழமா? காயா?

வெள்ளரிக்காய்க்கு அறிமுகமே தேவையில்லை. ஆரோக்கியமா இருக்கணும்னு நினைக்கிறவங்க.. ரெகுலரா வெள்ளரிக்காயை சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க. வெள்ளரிக்காயை நம்ம எல்லாரும் காய்கறினுதான் நினைச்சுட்டு இருக்கோம். இதை கறி செய்ய மாட்டோம்.. ஆனால் சாலட்ல பயன்படுத்துவோம். அதனால கண்டிப்பா காய்கறின்னுதான் நினச்சுட்டு இருக்கிறோம். ஆனா, உண்மையிலேயே... வெள்ளரிக்காய் காய் இல்லை. இது பழம். வெள்ளரிக்காய் பழ வகையிலதான் வருமாம்.

வெள்ளரிக்காய்

தாவரவியல் ரீதியாக, வெள்ளரியை பழம்னுதான் சொல்லுவாங்களாம். ஏன்னா... இது வெள்ளரி செடியில இருந்து பூ வந்து அதுக்கப்புறம் அது காயா மாறுது. அதுல விதைகளும் இருக்கு. அந்த விதைகளும் கூட.. தர்பூசணி, முலாம் பழ விதைகள் மாதிரியே இருக்கும். 

இதோட சுவை காரணமா, இனிப்பு பதார்த்தங்கள்ல பயன்படுத்துறதில்ல, சாலட்ஸ், சூப்ஸ்ல பயன்படுத்துறாங்க. அதனால இதை காய்கறினு நினைச்சுட்டு இருக்காங்க. இந்த வெள்ளரியில தண்ணீர் சதவீதம் ரொம்ப அதிகமா இருக்கு. உடம்பை  எப்பவும் குளிர்ச்சியா வச்சுக்கும். முக்கியமா கோடை காலத்துல உடம்பை ஈரப்பதமா வச்சுக்க, உதவி செய்யும். 

Latest Videos


வெள்ளரிக்காய் விதை

இனி வெள்ளரிக்காய் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. வெள்ளரிக்காய் மட்டும் இல்லாம அதோட விதைகளும் கூட ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது செய்யும். அது என்னென்னு பார்க்கலாம்..

வெள்ளரிக்காய் விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா ஜீரண பிரச்சனைகள் எல்லாம் குறைஞ்சு போகும். சருமம் அழகா மாறுமாம். வெள்ளரிக்காய் விதைகள்ல நார்ச்சத்து அதிகமா இருக்கு. யாருக்காவது மலச்சிக்கல் பிரச்சனை இருந்தா, அது ரொம்ப குறைஞ்ச நேரத்துல சரியாயிடும். வெள்ளரிக்காய் விதைகள்ல தண்ணீர் சதவீதம் கூட ரொம்ப அதிகமா இருக்கு. உடம்புக்கு தேவையான நீர்ச்சத்து இதோட உதவியால நமக்கு கிடைக்கும். உடம்பை ரொம்ப குளிர்ச்சியாவும் வச்சுக்கும். 

எடை குறைக்கலாம்

யாராவது எடை குறைக்கணும்னு நினைச்சா.. அவங்க டயட்ல இந்த வெள்ளரிக்காய் விதைகளை சேர்த்துக்கலாம். இதுல கலோரிகள் ரொம்ப குறைவா இருக்கும். நார்ச்சத்து அதிகமா இருக்கும். இதனால அதிக நேரம் வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும். இதனால சுலபமா எடை குறைக்க உதவி செய்யும். வெள்ளரிக்காய் விதைகள்ல ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. இது நமக்கு மன அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்யும். மூளை செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். நீண்ட கால பிரச்சனைகள் வராம பாதுகாக்ம். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், புற்றுநோய் மாதிரியானவை வராம இருக்க உதவி செய்யும்.

இதயத்தை காக்கும்

இந்த வெள்ளரிக்காய் விதைகள்ல இருக்கிற மெக்னீசியம், பொட்டாசியம்.. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பிபி -ஐ கட்டுப்பாட்டுல வச்சுக்க.. இதயம் ஆரோக்கியமா வேலை செய்ய உதவி செய்யும். அவ்வளவுதான் இல்லாம.. வெள்ளரிக்காய் விதைகள்ல வைட்டமின் ஈ அதிகமா இருக்கு. கொழுப்பு அமிலங்களும் கூட இருக்கு. இந்த ரெண்டும் சருமம் அழகா மாற உதவி செய்யும். இந்த விதைகள் சருமத்தை அதிக நேரம் ஈரப்பதமா சுருக்கமடையாம இருக்க உதவி செய்யும்.

click me!