ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
ராதா வேம்பு 1972-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி சென்னையில் பிறந்தார். சென்னையின் புகழ்பெற்ற தேசிய மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். தொடர்ந்து ஐஐடி மெட்ராஸில் 1997 இல் தொழில்துறை மேலாண்மையில் பட்டம் பெற்றார்.
ஜோஹோ கார்ப்பரேஷனின் எழுச்சி
ராதா வேம்பு தனது சகோதரர் ஸ்ரீதர் வேம்புவுடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு AdventNet என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் தற்போது Zoho என்ற முன்னணி நிறுவனமாக மாறி உள்ளது. ராதா உயர்கல்வி படித்துக் கொண்டிருக்கும் போதே போதே இந்த முயற்சி உருவானது. ராதா வேம்புவின் ஆரம்பகால தொழில் முனைவோர் மனப்பான்மை மற்றும் வளர்ந்து வரும் மென்பொருள் மேம்பாட்டுத் துறையில் தொலைநோக்கு பார்வையை எடுத்துக்காட்டுகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் Zoho கார்ப்பரேஷன் மென்பொருள் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது, அதன் வருவாய் ரூ.8,703 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.