மேட்ரிமோனியில் பெண் அல்லது மாப்பிள்ளை தேடுகிறீர்களா? இந்த 6 விஷயத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

First Published Aug 14, 2020, 5:38 PM IST

தெரிந்தவர்கள் மூலம், பெண் - மாப்பிள்ளை பார்த்து திருமண செய்து வைக்கு முறை தற்போது மாறி, ஆன்லைன் மூலம் வரன்கள் தேட துவங்கிவிட்டனர். அப்படி தேடும் போது நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய சில விஷங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்...
 

அந்த காலங்களில் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறினார்கள் நம் முன்னோர்கள், ஆனால் இந்த நவீன காலத்தில் ஆன்லைன் தளங்களில் தான் பல திருமணங்கள் நிச்சயிக்கப்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற சமூக வலைத்தளம் மூலம் பெண் - மாப்பிள்ளை தேடுபவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
undefined
பல ஆன்லைன் தளங்கள் ஏதோ கடையில் விற்கும் பொருள் போல் பல எண்களை உங்களுக்கு அனுப்பலாம். 30 நிமிடத்தில் நீங்கள் ஒருவரை பற்றி தெரிந்து கொண்டு அவருடன் வாழ முடியும், அல்லது வாழ முடியாது என தேர்வு செய்வது கூடாது. நன்கு தெரிந்த பிறகே ஒருவரை பற்றிய முடிவை எடுங்கள்.சரி எப்படி நமக்கு பொருத்தமான ஒருவரை தேர்வு செய்வது? வாங்க பார்க்கலாம்...
undefined
சரியான தளத்தைக் கண்டுபிடி:ஏராளமான ஆன்லைன் மேட்ரிமோனியல் தளங்கள் இருந்தபோதிலும், அவற்றில் பல இலவசம் என்றாலும், எந்தவொரு வலைத்தளத்திலும் பதிவுபெறுவதற்கு முன்பு உங்கள் நேரம், பட்ஜெட் மற்றும் தனிப்பட்ட தேவைகளை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம். தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்கும் வலைத்தளத்தைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் புத்திசாலித்தனமான ஒன்று. குறிப்பாக நீங்கள் பதிவு செய்யும் தளம் உரிய அங்கீகாரத்துடன் இயங்குகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
undefined
சரிபார்ப்பு:உங்களை பற்றி தீர விசாரித்து உண்மையான தகவல்களை கேட்கும் ஒரு தளத்தை மட்டுமே தேர்வு செய்யுங்கள். அப்படி பட்ட தளம் மற்றவர்களை பற்றியும் பொய்யான தகவல்களை கொடுப்பதில்லை.
undefined
அதிகம் கேள்வி கேளுங்கள்:ஆன்லைன் மூலம் வரன் வருகிறது என்றால் இருவர் தரப்பிலும் அதிக கேள்விகளை எழுப்புங்கள். ஒருவர் சரியான பதில் சொல்கிறாரா, அல்லது மழுப்பலோடு பதில் சொல்கிறாரா என்பது உங்களால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும், இதன் மூலம் ஆன்லைன் மூலம் திருமண மோசடிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
undefined
பெண் வீட்டார் கவனத்திற்கு:நடைமுறையில் உள்ள உண்மையான விஷயத்தையும் ஒரு நபரின் பின்னணி குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுவது விவேகமானது. உணர்ச்சிவசப்பட வேண்டாம், உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும்.
undefined
நேரடி சந்திப்பு:மெட்ரிமோனி மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர் உங்களுக்கு பிடித்து விட்டால், அவர் எப்படி பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள ஒரு சில மின்னஞ்சல் மற்றும் அழைப்புகள் போதும். நேரில் சந்திக்க விருப்பப்படுவதாக தெரிவித்தால், இரு குடும்பத்தினரும் சேர்ந்து பேசிவது முக்கியம்.
undefined
பொறுமை முக்கியம்:திருமணத்திற்கு நீங்கள் ஆன்லைன் மூலம் பெண் தேடும் போது பொறுமையை கடை பிடியுங்கள், 1000 கணக்கான தேடுதல்களில் உங்களுக்கு பிடித்த பெண்ணையோ.. மாப்பிள்ளையையோ சரியாக தேர்வு செய்ய வேண்டும் எனவே வாழக்கை விஷயத்தில் எப்போதும் பரபரப்பு வேண்டாம் .
undefined
click me!