தென்னிந்திய காலை உணவான இட்லி - தோசை கூட மோசமானவை என்பது உங்களுக்கு தெரியுமா?

First Published Aug 11, 2020, 1:34 PM IST

குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை... காலை நேரங்களில் உன்ன சிறந்ததாக கூறப்படும் இட்லி, மற்றும் தோசை போன்றவை மிகவும் மோசமானவை என்று கூறப்படுகிறது. காரணம் காலை நேரத்திலேயே, அரிசியால் செய்த உணவுகளை உன்ன துவங்குகிறோம் என்பதால் தான்.
 

தற்போது வெளிநாடுகளில் கூட தென்னிந்திய உணவுகள் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. இதற்க்கு முதல் காரணம் என்று பார்த்தல் சாப்பிடும் பதார்த்தங்கள் சுவையாக இருப்பது மட்டும் இன்றி, முழுமையாக சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வை கொடுப்பது தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளான, இட்லி, பூரி, தோசை, பொங்கல்... என சொல்லிக்கொண்டே போகலாம்.
undefined
பொதுவாக இட்லி, தோசை போன்ற உணவுகளில் கலோரிஸ் மற்ற உணவுகளை விட குறைவாக தான் இருக்கும் என்றாலும் இவையும் உடலுக்கு மோசமானவை என்றே கூறப்படுகிறது. சரி காலை நேரங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உங்கவுகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
undefined
மெது வடை:பலர் காலை உணவோடு விரும்பி உண்ணும் மெது வடை ஒன்றில், சராசரியாக 300 கலோரிகள் உள்ளது. அதுவும் நீங்கள் இவருடன் சேர்த்து சாப்பிடும் சட்னி மற்றும் சாம்பார் போன்றவை இன்னும் கலோரிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். இந்த வடை உளுந்து மற்றும் அரிசி மாவு சிறிதளவு சேர்த்து ஆரோக்கியமான வகையில் செய்தாலும். எண்ணையில் பொரித்து எடுப்பதால் இதன் ஆரோக்கியம் கேட்டுவிடுகிறது. பின்னர் சிலருக்கு இது ஜீரணம் ஆகவும் சிரமமாய் அமைகிறது. முடிந்தவரை குழந்தை பெற்றவர்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை இதுபோன்ற உணவை உன்ன கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
undefined
பரோட்டா மற்றும் பீப் கரி:வடக்கு கேரளாவில் பெரும்பாலும் உட்கொள்ளும் இந்த காலை உணவு, கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் உடல்நலனுக்கு மிகவும் மோசமானது. மைதா மற்றும் பாமாயில் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பரோட்டா, அதிக கிளைசெமிக் கொண்டுள்ளது. இதனால் இதை நீங்கள் சாப்பிடும்போது அதிகப்படியான குளுக்கோஸ் சுரக்கும், இது உடல் கொழுப்பாக சேமிக்கப்படும். பாமாயில் கலோரிகள் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளதால் இது எடை அதிகரிக்கும். பல்வேறு பிரச்சனைகள் வரவும் வழிவகுக்கும். எனவே இது போன்ற உணவு முறைகளை தவிர்ப்பது சிறந்தது.
undefined
மசாலா தோசை:தென்னிந்திய உணவு முறையில் மிகவும் பிரபலமானது, சுவையானது இந்த மசாலா தோசை. அரிசி சார்ந்த உணவுகளில் ஒன்றான இதில், உருளைக் கிழங்கு அடைக்கப்பட்டு, எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்டு சும்மா முறுகலாக செய்யப்படுவது இது. மசாலா தோசையில் சுமார் 350 க்கும் மேற்பட்ட கலோரிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது தவிர, உருளைக்கிழங்கு திணிப்பு மற்றும் எண்ணெய் ஒருவரை மந்தமாக ஆக்குகிறது.
undefined
இட்லி:இந்த வேகவைத்த உணவில் கொழுப்பு கொஞ்சம் கூட இல்லாததால் ஆரோக்யமான உணவாக அறியப்படுகிறது. இருப்பினும், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. இட்லிகள் பொதுவாக வெள்ளை அரிசியால் தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் கார்போஹைட்ரேட்டுகளால் நிறைந்துள்ளது. இது இட்லியின் ஆரோக்கியத்தை கெடுக்கும். எனவே முடிந்தவரை இட்லியை, பழுப்பு நிற அரிசி, மற்றும் சிறு தானியங்களில் செய்வது மிகவும் சிறந்தது. இது ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் அமையும்.
undefined
அவித்த மரவள்ளி கிழங்கு:கேரளாவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்று கப்பா... நீங்கள் மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போது நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு மற்றும் இரும்பு போன்ற தாதுக்களால் உங்கள் உடல் பயனடைகிறது. இருப்பினும், இந்த கிழங்கில் கலோரிகள் நிறைந்துள்ளன, மேலும் இது எடை இழப்புக்கு இடையூறாக இருக்கிறது. கிழங்கு வேகவைத்திருந்தாலும் உடல் பருமன் உள்ளவர்கள் இந்த உணவை சாப்பிடுவது நல்லது அல்ல.
undefined
மங்களூர் பன்ஸ்:கர்நாடகாவின் மங்களூர்-உடுப்பி பிராந்தியத்தில் தோன்றிய இந்த சுவையாக உணவில், ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரம் பொட்டாசியம் கொண்ட பிசைந்த வாழைப்பழங்கள் மட்டுமே. அதுவும் எண்ணையில் பொரித்தெடுக்கப்படுவதால் கொழுப்பு சத்து நிறைந்ததாக மாறுகிறது. எனவே இதனை காலை நேரங்களில் தவிர்த்து விடுவது மிகவும் சிறந்தது.
undefined
மசாலா அவலாக்கி:மாசாலா சேர்த்த அவல் உணவு இது , வேறுவிதமாகக் கூறினால், இது வெறும் மசாலா போஹா, கர்நாடகாவின் மங்களூர் பகுதியைச் சேர்ந்த இந்த டிஷ் காரமானதாகவும், கசப்பானதாகவும் இருக்கிறது, ஆனால் பொருட்களின் சுவை முடிவுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். தேங்காய் வெல்லம் மற்றும் புளி கொண்டு தயாரிக்கப்படுகிறது, இது ஒரு சிறந்த காலை உணவாக சாப்பிட ஏற்றது அல்ல.
undefined
பூரி மற்றும் கறி:பூரி தென்னிந்தியாவில் பரவலாக விரும்பப்படுகிறது. ஆனால் இந்த பொறித்த உணவு ஆரோக்கியமற்றது. இதற்க்கு பதிலாக குறைந்த எண்ணெயுடன் தயாரிக்கப்படும் சப்பாத்தியை நீங்கள் தேர்வு செய்வது சிறந்தது.
undefined
click me!