கொரோனாவை எதிர்த்து போராடும்... 9 எதிர்ப்பு சக்தி நிறைத்த உணவுகள்..!

First Published | Aug 13, 2020, 5:28 PM IST

நாம் தினம் தோறும், சில உணவுகளை உண்பது மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கொரோனா போன்ற கொடிய நோய் தொற்றில் இருந்து நம்மை காக்கும். அப்படி அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 9 உணவுகள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்... 
 

சிட்ரிக் ஆசிட் உள்ள பழங்கள்:ஏறக்குறைய அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது நம் உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கியமானது.பிரபலமான முடிந்தவரை உங்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய, எலுமிச்சை, திராச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களை அதிகம் எடுத்து கொள்ளுங்கள்.
ப்ரோக்கோலிஇந்த காய்கறியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ போன்றவை உள்ளது. எனவே ப்ரோக்கோலி கிடைத்தால் முடிந்தவரை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
Tap to resize

பூண்டுஒவ்வொருவரின் சமையலறையிலும் பூண்டு கண்டிப்பாக இருக்கும். லேசான கார சுவையை சமாளில் ஏற்பதுதான் செரிமானத்திற்கும் சிறந்தது பூண்டு. சீதா மருத்துவ முறைகளில் பூண்டை சிலந்தி, வண்டு கடித்த இடத்தில் தேய்த்தால் அதன் விஷ தன்மை முறித்துவிடும் என சொல்வார்கள்.அதுமட்டும் இன்றி பூண்டுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் மிக அதிகம். ஆகவே இனி பூண்டு முடிந்த வரை கொஞ்சம் அதிகமாகவே உங்கள் உணவுகளில் சேர்ந்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.
இஞ்சி:இஞ்சி தொற்று நோயின் எதிரி என கூறலாம். தொண்டை புண் மற்றும் அழற்சி நோய்களைக் குறைக்க இஞ்சி உதவுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் குடிக்கும் பால், டீ, போன்றவற்றில் கூட இஞ்சியை சேர்ந்து கொள்ளுங்கள்.
கீரை வகைகள்:முடிந்தவரை கீரைகள் எடுத்து கொள்வது உங்களுடைய உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இதை ஆண்டி ஆக்சிடன்ட் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளதால் இது நோற்று நோய்களை எதிர்த்து போராடுகிறது.
பாதாம்:இதில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தையை உருவாக்கும். பாதாமில் முத்துவதும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளதால், முடிந்தவரை குழந்தைகள் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் 3 பருப்புகள் முதல் 5 பருப்புகள் வரை சாப்பிடுங்கள்.
சூரியகாந்தி விதைகள்சூரியகாந்தி விதைகளில் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் பி -6 மற்றும் ஈ உள்ளிட்ட ஊட்ட சத்துகள் உள்ளன.நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வைட்டமின் ஈ அவசியம். எனவே இதையும் உணவில் சேர்ந்து கொள்ளுங்கள்.
மஞ்சள்:பல நல்ல விஷயங்களில் முதலில் இருப்பது மஞ்சள் தான். இதன் மருத்துவ குணமும் அதற்க்கு ஏற்ற போல் அதிகமாகவே உள்ளது. உங்க சமயலறையில் என்றும் நிலைத்திருக்கும் இந்த உணவு பொருள், நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த மறுத்து. எனவே தவறாமல் மஞ்சளை உங்கள் உணவில் பயன்படுத்துங்கள் பயன்பெறுங்கள்.
பப்பாளிபப்பாளி பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிரம்பியுள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை அதிக அளவில் உள்ளதால் உங்கள் ஆரோக்கியத்தை அது மேம்படுத்தும். எனவே தவறாமல் முடிந்தவரை பப்பாளி பழம் எடுத்துக்கொள்ளுங்கள்.

Latest Videos

click me!