மழைக்கால ஈரப்பதத்தால் சுவரில் உப்பு பூத்து பெயிண்ட் உதிர்கிறதா? கிச்சனில் இருக்கும் இந்த 2 பொருள் போதும்!

Published : Sep 19, 2026, 04:17 PM IST

மழைக்காலத்தில் சுவர்களில் உப்பு பூத்து பெயிண்ட் உதிர்வதை வெறும் உப்பு, வேப்ப எண்ணெய் மற்றும் எளிய வீட்டு பராமரிப்பு வழிகள் மூலம் செலவில்லாமல் தடுப்பது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்.

PREV
15
எளிய வீட்டு முறைகள் மூலம் சரிசெய்வது எப்படி?

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பெரும்பாலான வீடுகளில் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாகச் சுவர்களில் ஈரப்பதம் அதிகரிப்பதும், உப்பு பூத்து பெயிண்ட் உதிர்வதும் அமைகிறது. காற்றில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக அலமாரிகளில் உள்ள துணிகளில் பூஞ்சை வாசனை வீசுவது, மரச்சாமான்கள் பாதிக்கப்படுவது மற்றும் சுவர்கள் வீங்கி வீட்டின் அழகே சிதைவது எனப் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனினும், அதிக செலவின்றி சமையலறையில் உள்ள சில எளிய பொருட்கள் மற்றும் முறையான பராமரிப்பு உத்திகள் மூலம் இந்தப் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காண முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

25
ஈரப்பதத்தை போக்க எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்பாடு

வீட்டிற்குள் நீராவி மற்றும் ஈரப்பதம் தேங்குவதைத் தவிர்க்க எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) பயன்பாடு மிக அவசியமாகும். குறிப்பாக சமையலறை மற்றும் குளியலறைகளில் இவற்றைத் தவறாமல் இயக்க வேண்டும். சமைக்கும் போதும், குளிக்கும் போதும் காற்றில் கலக்கும் அடர்த்தியான நீராவி வீடு முழுவதும் பரவி சுவர்களில் படிவதைத் தடுத்து, அவற்றை உடனடியாக வெளியேற்ற இவை உதவுகின்றன.

35
நீர்க்கசிவுகளைக் கண்டறிதல்

சுவர்களைச் சுத்தம் செய்த பிறகும் மீண்டும் மீண்டும் ஈரப்பதம் தென்பட்டால், வீட்டின் உட்புறக் குழாய்களில் மறைமுக கசிவுகள் உள்ளதா அல்லது மொட்டை மாடி மற்றும் கூரைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இத்தகைய கசிவுகளை உடனடியாகச் சரிசெய்வதே சுவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பைத் தரும்.

45
கல் உப்பு மற்றும் வேப்ப எண்ணெய் தீர்வு

இயற்கையான முறையில் ஈரப்பதத்தை உறிஞ்சுவதில் கல் உப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சுவர்களில் உப்பு பூக்கும் இடங்களிலோ அல்லது ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளிலோ ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு கல் உப்பை வைத்து வரலாம். இது காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை விரைவாக ஈர்த்துக்கொள்ளும். அத்துடன் சில துளிகள் வேப்ப எண்ணெயைச் சேர்த்து வைக்கும்போது, பூஞ்சைத் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுவதுடன் மழைக்காலத்தில் உருவாகும் பூச்சித் தொல்லைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

55
விரிசல்களை அடைத்தல் & பெயிண்டிங் முறைகள்

மழைக்காலம் தொடங்கும் முன்பே சுவர்களில் தென்படும் சிறிய விரிசல்கள் மற்றும் துளைகளை ‘கிராக் ஃபில்லர்’ (Crack Filler) அல்லது சீலண்ட் (Sealant) கொண்டு அடைக்க வேண்டும். இது வெளிப்புற மழைநீர் சுவர்களின் உட்பகுதிக்குள் இறங்குவதைத் தடுத்துவிடும். மேலும், புதிதாகப் பெயிண்ட் அடிக்கத் திட்டமிடுபவர்கள் நேரடியாகப் பூசாமல், முதலில் நல்ல தரமான பிரைமரைப் (Primer) பூச வேண்டும். அதன் பின்னர் வாட்டர்ப்ரூஃப் (Waterproof) மற்றும் பூஞ்சை எதிர்ப்புத் தன்மை (Anti-fungal) கொண்ட தரமான பெயிண்ட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுவர்கள் பாழாகாமல் புத்தம் புதிதாகப் பராமரிக்க முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories