LifeStyle: பாத்ரூமுக்கு ஒரு நேச்சுரல் லுக் கொடுக்க வேண்டும். ஆனால் அங்கு போதிய சூரிய வெளிச்சம் வராதே... செடிகள் எப்படி உயிர்வாழும்?என்று நீங்கள் யோசிப்பது நியாயம்தான். அத்தகைய செடிகளை நம் குளியலறையில் வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக குளியலறையில் ஈரப்பதம் அதிகமாகவும், சூரிய வெளிச்சம் குறைவாகவும் இருக்கும். இதனால் அனைத்து செடிகளாலும் அங்கு உயிர்வாழ முடியாது. ஆனால், இத்தகைய சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, காற்றைச் சுத்தப்படுத்துவதோடு பாத்ரூமுக்கு ஒரு நேச்சுரல் லுக் கொடுக்கும் சில செடிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
26
ஜிஜி பிளான்ட்
அதிக பராமரிப்பு தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கான முதல் சாய்ஸ் இதுதான். இதன் இலைகள் தடிமனாகவும், பளபளப்பான அடர் பச்சை நிறத்திலும் இருக்கும். இதன் தண்டுப்பகுதி சதைப்பற்றோடு இருப்பதால், தனக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும். குறைந்த வெளிச்சம் உள்ள பாத்ரூம்களிலும் இது எவ்வித சிரமமுமின்றி வளரும்.
36
சைனீஸ் எவர்கிரீன்
பாத்ரூம் எப்போதும் பச்சையாக மட்டுமே இருக்க வேண்டுமா என்ன? கொஞ்சம் கலர்ஃபுல்லாக மாற்ற இந்தச் செடி உதவும். இதன் இலைகளில் பச்சை, சில்வர், பிங்க் மற்றும் சிவப்பு எனப் பல வண்ணங்கள் கலந்திருக்கும். பூக்கள் பூக்காமலேயே உங்கள் குளியலறையை வண்ணமயமாக மாற்றும் திறன் கொண்டது. மிதமான வெளிச்சமும் ஈரப்பதமும் இதற்குப் போதுமானது.
இதனைப் பராமரிப்பது மிகவும் எளிது. பாத்ரூம் ஷெல்ஃப்களில் வைக்க இதுவே மிகச்சிறந்த செடியாகும். இந்தச் செடி வளர வளர, இதன் அடியில் இருந்து சிறிய புதிய செடிகள் கீழ் நோக்கித் தொங்கும். மறைமுக சூரிய வெளிச்சத்தில் நன்றாக வளரும். ஷெல்ஃபில் இருந்து தொங்கும்போது ஒரு பச்சை நிற அருவி போன்ற அழகான தோற்றத்தைக் குளியலறைக்குத் தரும்.
56
பேம்பூ பாம்
வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும், அமைதியான சூழலையும் கொண்டு வர இந்தச் செடி உதவும். இறகு போன்ற வடிவத்தில் இதன் பச்சை இலைகள் நீண்டு வளரும். ஈரப்பதம் மிக்க சூழல் இதற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் பாத்ரூமில் நன்றாக வளரும். இதனை வைக்கும்போது சொகுசான ஒரு 'ஸ்பா'-வுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு கிடைக்கும்.
66
பேர்ட்ஸ் நெஸ்ட் ஃபெர்ன்
குளியலறையின் ஏதேனும் ஒரு வெற்று மூலையை அழகாக்க இந்தச் செடி சிறந்த தேர்வாகும். பறவையின் கூடு போன்ற வடிவத்தில் இதன் பெரிய இலைகள் சுருள் சுருளாக விரிந்து தனித்துவமாகத் தெரியும். ஈரப்பதமான காற்று இதற்கு மிகவும் பிடிக்கும் என்பதால், பாத்ரூம் சூழலுக்கு மிக விரைவாகப் பழகி, அந்த இடத்தையே எப்போதும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.