Irfan: புதிய ஹோட்டல் சென்று சாப்பிடுவதற்கு...யூடியூப் ரிவியூ கலாச்சாரம் சரியா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்...

Published : Jul 07, 2022, 02:26 PM IST

Youtuber Irfan Review: சினிமா முதல் ஆன்லைனில் சீப்பு வாங்குவது வரை ஏராளமானோர் யூடியூப் ரிவியூவை பார்த்து முடிவு செய்கிறார்கள். அந்த அளவிற்கு யூடியூப் ரிவி கலாச்சாரம் மக்களிடையே பரவியுள்ளது. இது சரியான வழிமுறைதானா..? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். 

PREV
14
Irfan: புதிய ஹோட்டல் சென்று சாப்பிடுவதற்கு...யூடியூப் ரிவியூ கலாச்சாரம் சரியா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்...
youtuber irfan

சினிமா முதல் ஆன்லைனில் சீப்பு வாங்குவது வரை ஏராளமானோர் ரிவியூவை பார்த்து முடிவு செய்கிறார்கள். அந்த அளவிற்கு யூடியூப் ரிவி கலாச்சாரம் மக்களிடையே பரவியுள்ளது. நண்பர்களுடன் புதிய ஓட்டல் சென்று சாப்பிடுவதை கூட, யூடியூப்பில் கேட்கிறார்கள். ஆனால், இப்படி ரிவியூவை மட்டும் நம்புவது சரியாகாது. அது உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கலாம். 

மேலும் படிக்க.....Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய நன்மைகள்

24
youtuber irfan

அப்படியான ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.உணவு விமர்சகராக  யூடியூப் மூலம், பிரபலமானவர் இர்பான். இவர் தமிழ்நாடு முதல் வெளிநாடு வரை பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக இணையத்தில் பதிவிடுவார். இவருக்கு யூடியூப்பில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் கமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு இவனுடைய வீடியோவை ரசித்து பார்ப்பதாகவும், இவர் சாப்பிடும் விதம் ரசிக்கும் படி இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடக்கத்தக்கது. 
 

34
youtuber irfan

இந்த நிலையில் தற்போது, இர்பான் உள்ளிட்ட யூடியூப் விமர்சகர்களால் கொண்டப்படும் ரோஸ் வாட்டர் உணவகத்திற்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர். அங்கு சாப்பிட்ட சென்ற நபர், ஒருவருக்கு கேட்டு போன உணவுகள் பரிமாறப்பட்டதாக, கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. ஆம், அந்த சோதனையில் உணவகத்தில் இருந்து 10 கிலோ கெட்டுப்போன இறால், அழுகிய 45 கிலோ சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சிகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் படிக்க.....Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய நன்மைகள்

44
youtuber irfan

இதையடுத்து, அதிகரிகள் 5000 அபாதரம் விதித்ததோடு, உணவு பதப்படுத்தும் இடங்களை சரியான முறையில் பராமரிக்கவும், முறையற்று இருக்கும் இடத்தை புதுப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதையடுத்து, சீரமைக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு, அதிகாரிகள் மீண்டும் மீண்டும் ஒருமுறை வந்து சோதனை மேற்கொண்ட பிறகே, உணவகம் செயல்பட வேண்டும். அதுவரை ஓட்டல் செயல்பட தடைவித்து உத்தரவிட்டுள்ளனர். எனவே, எதையும் நீங்களே உணர்வு பூர்வமான முடிவு எடுங்கள். ரிவியூவை நம்பியதால் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி நீங்கள் கீழே பகிருங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories