Indian Railways: ரயில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு சில இலவச வசதிகள் கிடைப்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்திய ரயில்வே வழங்கும் இந்த சேவைகள் பற்றி பார்க்கலாம்.
ரயில் பயணம் என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு அழகான அனுபவம். ஜன்னல் ஓர இருக்கை அமர்ந்து கொண்டு வெளியே ஓடும் பசுமையான காட்சிகள் என ரயிலில் பயணம் செய்வதே ஒரு தனி சுகம் தான். இந்நிலையில் இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். குறைந்த செலவு, வசதியாக நீண்ட தூரம் பயணம், பாதுகாப்பான பயணம் போன்ற காரணமாக பேருந்தை விட ரயில் பயணத்தையை அதிகளவில் விரும்புகின்றனர். ஆனால், ரயில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு சில இலவச வசதிகள் கிடைப்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்திய ரயில்வே வழங்கும் இந்த சேவைகள் உங்கள் பயணத்தை இன்னும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்.
26
காத்திருப்பு அறை
பயணிகளுக்கு ரயில்வே ஸ்டேஷன்களில் கிடைக்கும் ஒரு முக்கிய வசதிதான் 'காத்திருப்பு அறை'. ரயில் தாமதமாக வந்தாலோ அல்லது நீங்கள் ஸ்டேஷனுக்கு சீக்கிரம் வந்துவிட்டாலோ, இங்கே இலவசமாக அமர்ந்து ஓய்வெடுக்கலாம். பெரும்பாலான முக்கிய ஸ்டேஷன்களில் ஏசி மற்றும் நான்-ஏசி காத்திருப்பு அறைகள் உள்ளன. இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
36
ஏசி கோச் பயணிகளுக்கான வசதிகள்
ஏசி கோச்சுகளில் பயணம் செய்பவர்களுக்கு ரயில்வே துறை பெட்ஷீட், தலையணை மற்றும் போர்வையை இலவசமாக வழங்குகிறது. இதற்காக கூடுதல் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. குறிப்பாக இரவு நேர பயணங்கள், குளிர்காலம் அல்லது மழைக்காலங்களில் இந்த வசதி பயணத்தை மிகவும் வசதியாக மாற்றுகிறது.
தற்போதைய காலத்தில் இன்டர்நெட் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. இதை மனதில் வைத்து பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தாமலேயே ரயிலின் ஸ்டேட்டஸை செக் செய்யலாம். ஆன்லைன் வேலைகளை முடிக்கலாம். குறிப்பாக சிக்னல் சரியாக இல்லாத இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
56
மருத்துவ உதவி
பயணத்தின் போது உடல்நிலை சரியில்லாமல் போனால், ரயில்வே துறை உதவ தயாராக இருக்கிறது. அவசர சூழல்களில் மருத்துவ உதவி வழங்கப்படும். தேவைப்பட்டால், அடுத்த ஸ்டேஷனில் மருத்துவருக்கும் ஏற்பாடு செய்யப்படும். இதனால் பயணிகள் பாதுகாப்பாகப் பயணிக்கலாம்.
66
மற்ற சேவைகள்
இது தவிர, பயணத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் TTE, கோச் அட்டெண்டன்ட் அல்லது ரயில்வே ஹெல்ப்லைன் மூலம் உதவி பெறலாம். குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த சேவைகள் மிகவும் முக்கியம். இந்த இலவச வசதிகளைப் பற்றி தெரிந்துகொண்டு பயன்படுத்தினால், உங்கள் ரயில் பயணம் இன்னும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.