புடவைகள் எப்போதுமே இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. புடவையை விரும்பாத பெண்கள் மிக மிக குறைவு. அதில் முகேஷ் அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சண்டும் விதிவிலக்கல்ல. ராதிகா மெர்ச்சன்ட் புடவை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ராதிகா மெர்சண்ட் புடவை என்பது வெறும் ஆடை அல்ல; அது ஒரு கலை வேலை.
புகழ்பெற்ற கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டது, இந்த சேலை ஆடம்பர மற்றும் செழுமையின் உச்சத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் இந்த சேலையின் மதிப்பு ரூ. 345 கோடி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான். இது ஏன் இவ்வளவு விலை? இந்த புடவையின் சிறப்பம்சம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
இணையற்ற கைவினைத்திறன்
ராதிகா மெர்ச்சன்ட் சேலை இந்திய நெசவாளர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இந்த புடவையின் ஒவ்வொரு நூலும் தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களால் நுணுக்கமாக நெய்யப்பட்டிருக்கிறது. எனவே இந்த புடவை தலைசிறந்த படைப்பாக அமைகிறது. சிக்கலான வடிவங்கள் மற்றும் மையக்கருத்துகள் பாரம்பரிய இந்திய கலை வடிவங்களால் ஈர்க்கப்பட்டு, சமகால வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.