உலக பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவருடைய மனைவி நீதா அம்பானி. இத்தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற இருமகன்களும், இஷா அம்பானி என்ற ஒரு மகளும் உள்ளனர். முகேஷ் அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் வித்தியாசமான வாழ்க்கை முறைக்காக நன்கு அறியப்பட்டவர்கள். சில மாதங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. சமீபத்தில் ராதிகா மெர்ச்சன்ட்டின் நிச்சயதார்த்த மோதிரம் குறித்த தகவல்கள் கசிந்தன. உண்மையில் அம்பானி குடும்பப் பெண்களிடம் பல மதிப்புமிக்க பொருட்கள் இருந்தாலும், அவர்களுடைய நிச்சயதார்த்த மோதிரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.