பொங்கல் இந்த திசையில் மட்டும் பொங்கினால் பிரச்சனை தான்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

First Published Jan 12, 2021, 12:55 PM IST

புத்தரிசியில்... பொங்கல் வைத்து,  புதிய ஆடை உடுத்தி பொங்கல் திருவிழாவை வரவேற்க தமிழ் மக்கள் பலரும் தயாராகி விட்டனர். அதே நேரத்தில் நம், முன்னோர்கள் பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும். அப்படி பொங்கும் திசையை வைத்து, இந்த வருடம் முழுவதும் அந்த குடும்பம் எப்படி இருக்கும் என்பதையும் கணித்து கூறியுள்ளனர்.
 

கிராமப்புறங்களில் கூட தற்போது தார் ரோடு வந்து விட்டதால், வாசல் பொங்கல் வைப்பவர்களை பார்ப்பது கூட மிகவும் அரிதாகி விட்டது. குறிப்பாக, நகரங்களில் வாழும் பலர் வீட்டின் உள்ளேயே கேஸ் அடுப்பில் தான் பொங்கல் வைத்து வழிபாடுகிறார்கள்.
undefined
இப்படி கேஸ் அடுப்பில் நீங்கள் பொங்கல் வைபவராக இருந்தால் கூட பொங்கல் பொங்கி வரும்போது, அடுப்பை சிம்மில் வைக்காமல் அதனை பொங்க விடுவதே நலம்.
undefined
சரி... பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாங்க.
undefined
கிழக்கு - பொங்கல் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தால் அது சுமூகமாக நடக்கும். ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை வாங்கி மகிழ்வீர்கள். உடை மற்றும் ஆபரணங்கள் சேரும் வாய்ப்புகள் அதிகம்.
undefined
மேற்கு - பொங்கல் மேற்கு பக்கத்தில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். மகன் - மகளுக்கு வரன் தேடுபவராக இருந்தால் இந்த வருடத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதை குறிக்கும்.
undefined
வடக்கு - பொங்கல் வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் பண வரவு அதிகரிக்கும். நீங்கள் பதவி உயர்வு அடைவீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுகள் நிறைவாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் போக வாய்ப்புகள் அதிகம். கொடுத்த கடன் எந்த தடங்கலும் இன்றி கைக்கு வந்து சேரும்.
undefined
தெற்கு திசையில் பொங்கல் பொங்கி வழிந்தால் பிணி என்றே சொல்லலாம். அந்த வருடம் முழுவதும், மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலையில் அதிக சோர்வு காணப்படும். சுப காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். எனவே உடல்நிலையில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நலம். எனவே தெற்கு திசையில் பொங்கினால் மட்டுமே பிரச்சனை. மற்ற எந்த திசையில் பொங்கினாலும் அதை பற்றி நீங்கள் பெரிதாக கவலைப்பட வேண்டாம்.
undefined
click me!