
பெற்றோராக, உங்கள் குழந்தை நல்ல மனிதராக மாற, குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால் சில பெற்றோர் தங்களுக்கு தெரியாமல் சில தவறுகளை செய்கின்றனர். பெற்றோர் செய்யும் இந்த தவறுகள் குழந்தையின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தையின் முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் மற்றும் நடத்தைகள் என்ன என்பதை பலரும் புறக்கணிக்கிறார்கள். எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க விரும்பினால், அவர்கள் முன் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெரியவர்களை அவமரியாதை செய்யக்கூடாது
உங்கள் பிள்ளை பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்களும் குழந்தைகளுக்கு முன்னால் பெரியவர்களை மதிக்க வேண்டும். நீங்கள் பணிவாகப் பேச வேண்டும், இளையவர்களிடம் சமமான அன்புடனும் பாசத்துடனும் பழக வேண்டும். அப்போதுதான் உறவுகளும் உணர்ச்சிகளும் எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் குழந்தை புரிந்து கொள்ளும்.
கவனமாகக் கேளுங்கள்
உங்கள் பிள்ளைகள் உங்களுடன் பேச முயற்சிக்கும்போது, அவர்கள் சொல்வதை கவனமாக கேளுங்கள். அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் பேசி முடித்த பிறகு, நீங்கள் எதை விளக்க விரும்புகிறீர்களோ அதை விளக்குங்கள். குழந்தையைக் குழந்தையாகக் கருதி குழந்தையின் வார்த்தைகளைப் புறக்கணிக்காதீர்கள்.
எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்
பல நேரங்களில் பெற்றோர்கள் குழந்தை தவறு செய்யும் போது முட்டாள், பைத்தியம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், இது அவர்களின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. இதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், குழந்தை அதைச் சரியாகக் கருதத் தொடங்கும். அவர் தன்னைத் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கத் தொடங்குவார். எனவே, உங்கள் குழந்தையிடம் இவற்றைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிகப்படியான கட்டுப்பாடு
உங்கள் குழந்தைக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினால், அவர்களுக்கு சுய சந்தேகம் வரத் தொடங்கும். அவர்களுடையை முடிவெடுக்கும் திறன் பலவீனமடையும். எனவே, பெற்றோர்களாக, குழந்தை புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசும்போது, அதைச் செய்யட்டும். அவர் சொல்வது சரியல்ல என்று நீங்கள் உணர்ந்தால், தவறு நடக்கும் முன் அவரைத் தடுக்க நீங்கள் அவரைக் கண்காணிக்க வேண்டும். இதற்குப் பிறகு, அவருடைய இந்த புதிய விஷயம் சரியல்ல என்பதை நீங்கள் அவருக்கு விளக்க வேண்டும்.
முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்
பெரும்பாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் பார்க்க வேண்டாம். மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உங்கள் பிள்ளையை போன் பார்க்க வேண்டாம் என்று கூறினால் முதலில் நீங்கள் போன் பார்க்க கூடாது, அதே போல் உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் முதலில் அதை செய்ய வேண்டும்.
எனவே, உங்கள் குழந்தையிடம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை முதலில் நீங்களே செய்யுங்கள். ஏனென்றால் பெற்றோர் தான் குழந்தைக்கு முன்மாதிரி. குழந்தைகள் நல்ல மற்றும் கெட்ட பழக்கங்களை பெற்றோர்களிடம் இருந்து மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.