துணி துவைப்பது பலருக்கும் பிடிக்காத விஷயம். ஆனால் துணிகளை துவைக்காமல் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. ஒருவருடைய தோற்றம் அவருடைய ஆடைகளை பொருத்துதான் அமையும். துவைக்காத அழுக்கு துணிகளை உடுத்தும்போது உங்களுடைய மதிப்பும், மரியாதையும் குறையும்.
நன்கு துவைத்த ஆடைகள் தான் உங்களுடைய மதிப்பை உயர்த்தும். அதனால் தான் பட்டு சேலைகளை வெளியில் உடுத்தி செல்ல பெண்கள் விரும்புவார்கள். பட்டுச் சேலைகளை அணிந்து கொள்ளும் போது சபையில் தனித்த அழகும், மிடுக்கான தோற்றமும் வரும். ஆனால் அதை உடுத்திய பிறகு துவைப்பது பெரும்பாடாக மாறிவிடும்.
25
Tips To Wash Silk Saree In Tamil
அதை மற்ற துணிகளை போல துவைக்க முடியாது. அப்படி துவைத்தால் அந்த புடவைக்கான தன்மையும் பொலியும் மங்கி விடும். அதற்கென தண்ணீர் இல்லாத ட்ரை கிளீன் செய்ய தான் கொடுக்க வேண்டும். அதற்கு செலவும் அதிகம் தான். ஆனால் வீட்டிலேயே பட்டுச் சேலையை ஈஸியாக எப்படி துவைக்கலாம் என இங்கு காணலாம்.
35
Tips To Wash Silk Saree In Tamil
பட்டுப் புடவையை ட்ரைவாஷ் செய்வதற்கு தனியே செலவு செய்ய முடியாதவர்கள் வீட்டில் அதை எப்படி சுத்தம் செய்ய முடியும் என்றே நினைப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு. மிக குறைந்த செலவில் வீட்டிலேயே பட்டுப்புடவையை துவைக்கலாம். ஒரு வாளியில் பாதியளவு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள்.
ஒரு பாக்கெட் கண்டிஷ்னர், ஒரு பாக்கெட் ஷாம்பு கலந்து கொள்ளுங்கள். நன்கு நுரை பொங்க கலக்கிவிட்டு வாசனைக்காக கம்பர்ட் ஊற்றுங்கள். இந்த நீரில் மற்றொரு சுத்தமான துணியை நனைத்து கொள்ளுங்கள். இந்த துணியை கொண்டு புடவையில் கரை படிந்த பகுதியில் தேய்த்து விடுங்கள். இப்படி செய்யும்போது கரை நீங்கும். இந்த முறையில் மற்ற டிசைனர் புடவைகளை கூட துவைக்கலாம்.
கரை இருக்கும் இடத்தில் இது மாதிரி செய்து முடித்த பின்னர் புடவையை காய வையுங்கள். சூரிய ஒளிபடும் இடத்தில் புடவையை காய வைக்க கூடாது. நிழலில் உலர வையுங்கள். இதன் பின்னர் அயர்ன் செய்தால் போதும். பட்டுப்புடவை பொலிவு மங்காமல் அப்படியே இருக்கும். அதிகமாக பணம் செலவு செய்து ட்ரை க்ளின் பண்ணுவதை விட இது எளிதாக இருக்கும். பணமும் மிச்சமாகும்.