கோபத்தை புறக்கணிக்கவும்
சில நேரங்களில் உங்கள் குழந்தைகள் அடம்பிடிக்கும் போது, அவர்களை புக்கணிப்பது சிறந்த யோசனையாகும். அவர்கள் அழுவார்கள், கத்துவார்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து விட்டுவிடுவார்கள். இந்த நடைமுறையை கடைபிடியுங்கள், அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். அப்போது தான் அடம் பிடிப்பது உதவாது என்பதை உங்கள் குழந்தை உணர்ந்து கொள்ளும், அது ஒருக்கட்டத்தில் அழுகையை நிறுத்திவிடும்.
.குழந்தைகளை அமைதிப்படுத்துங்கள்
உங்கள் பிள்ளை கட்டுப்படுத்த முடியாத அளவு கோபப்பட்டால், அல்லது சமாதானப்படுத்த முடியாமல் போனால், அவர்களை அமைதிப்படுத்துங்கள். அவர்களை அணைத்து அன்புடன் சமாதானப்படுத்துங்கள். குழந்தைகளிடம் உங்கள் அன்பையும் அக்கறையையும் நிதானமாக வெளிப்படுத்துங்கள். சில நேரங்களில், அவர்கள் கேட்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் அமைதியாக இருக்க சிறிது நேரம் அனுமதியுங்கள்.