குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாக இருக்கும். குழந்தைகளை படிப்பிற்காக தங்கள் வாழ்நாட்களில் பாதியை கரைக்கும் பெற்றோரும் இங்கு உண்டு. இவ்வளவு பாடுபட்டு குழந்தைகளை படிக்க வைக்கும்போது அவர்களின் கவனம் சிதறுவதை எந்த பெற்றோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
படித்துக் கொண்டிருக்கும் போது குழந்தைகளின் கவனம் சிதறுவது இயல்பானதுதான். ஆனால் அடிக்கடி கவனம் சிதறினால் அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு புரியாது. படிப்படியாக ஆர்வமும் குறையத் தொடங்கும். இதனை விரைவில் சரிசெய்ய வேண்டும். இதை சரிசெய்ய பெற்றோர் ஒரே ஒரு விஷயத்தை செய்தாலே போதும். அதை இந்தப் பதிவில் காணலாம்.
25
கவனச் சிதறல்
மனிதர்களின் மூளை தொடர்ந்து ஒரு செயலை செய்யும் போது சோர்வடைவது இயல்பானதுதான். பொதுவாக படிக்கும் போதும் மூளை சோர்வடையக்கூடும். அதனால் குழந்தைகளை தொடர்ச்சியாக படிக்க வைப்பதை விட குறைந்தபட்ச இடைவெளி விட்டு படிக்க வைப்பது நல்லது. பொமடோரா என சொல்லப்படும் டெக்னிக் கவனச் சிதறல் இல்லாமல் குழந்தைகள் படிப்பதற்கு உதவும் சிறந்த டெக்னிக் ஆகும்.
35
பொமடோரா டெக்னிக்
இந்த டெக்னிக்கில் ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கு ஒரு முறையும் 5 நிமிடங்கள் இடைவெளி விட்டு குழந்தைகளை படிக்கச் செய்யலாம். உதாரணமாக இரண்டு மணி நேரம் குழந்தைகள் வீட்டில் படிக்கிறார்கள் என்றால் நான்கு முறை இடைவெளிகள் விடலாம். நான்காவது இடைவெளியை 15 முதல் 20 நிமிடங்கள் நீட்டிக்கலாம். படித்து முடித்ததும் இறுதியில் அன்றைய தினத்தில் அவர்கள் படித்து அனைத்தையும் ஒருமுறை நினைவு கூற செய்வது அவசியம்.
குழந்தைகளுக்கு கிராம்பு நீர் கொடுப்பது அவர்களுடைய கவனச் சிதறலையும், மந்தமான உணர்வையும் நீக்க உதவுகிறது. குழந்தைகள் படிக்கும் போது ஏற்படும் கவனச் சிதறலை குறைக்க கொஞ்சம் கிராம்பு நீர் அருந்தலாம். இதற்காக இரவில் தண்ணீரில் சில கிராம்புகளை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை மறுநாள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அடிக்கடி ஏற்படும் கவனச் சிதறலை நீக்க இந்த தண்ணீர் உதவும்.
55
தோப்புக்கரணம்
குழந்தைகளுக்கு சிறுவயதில் யோகா சொல்லித்தருவது நல்லது. அவர்களின் மனதை ஒருநிலைப்படுத்த, கவனத்தை அதிகரிக்க யோகா உதவும். எடுத்துக்காட்டாக படிக்கும் முன்பு 10 தோப்புக்கரணம் போட சொல்லலாம். இது அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் உதவும்.