மிகவும் பொதுவான மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தைகளில் ஒன்று உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது. அது உடன்பிறந்தவராக இருந்தாலும் சரி, ஒரு வகுப்புத் தோழராக இருந்தாலும் சரி, அல்லது ஒரு நண்பரின் குழந்தையாக இருந்தாலும் சரி. வேறு எந்த குழந்தையுடனும் உங்கள் குழந்தையை ஒப்பிடாதீர்கள்.
ஆளுமை மற்றும் சமூக உளவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பெற்றோரால் மற்றவர்களுடன் அடிக்கடி ஒப்பிடப்படும் குழந்தைகள் குறைவான சுயமரியாதை உடனும் மற்றும் சமூக கவலையை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒப்பீடுகளுக்குப் பதிலாக, உங்கள் குழந்தையின் தனித்துவமான திறன்களை அங்கீகரித்து அதில் சிறப்பாக வளர அவர்களை ஊக்குவிக்கவும்.
குழந்தைகளின் உணர்ச்சிகள் பெரும்பாலும் தீவிரமானதாகவும், பெற்றோர்களால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். அவர்களின் உணர்வுகளை நிராகரிப்பது அல்லது செல்லாததாக்குவது அவர்களுக்கு நீங்கள் மதிப்பளிக்கவில்லை என்பதை உணர்த்தும். தங்கள் உணர்ச்சிகளை பெற்றோர்கள் மதிக்கவில்லை என்று குழந்தைகள் நினைக்கலாம்.
இதனால் இளமைப் பருவத்தில் உணர்ச்சி மற்றும் நடத்தை சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்களின் உணர்வுகளை ஒடுக்குவதற்கு பதிலாக, அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்லவும். குழந்தைகளிடம் பச்சாதாபத்தையும் புரிந்துணர்வையும் காட்ட வேண்டும்.