தாஜ்மஹாலையே பின்னுக்கு தள்ளிய உலகின் விலையுயர்ந்த பங்களா - அதோட விலை என்னனு தெரியுமா?

Published : Jun 24, 2023, 04:36 PM IST

தாஜ்மஹாலேயே மிஞ்சும் அழகில் உலகின் மிக விலையுர்ந்த பங்களா துபாயில் அமைந்துள்ளது. 

PREV
15
தாஜ்மஹாலையே பின்னுக்கு தள்ளிய உலகின் விலையுயர்ந்த பங்களா - அதோட விலை என்னனு தெரியுமா?

உலக அதிசயங்களுள் ஒன்று தாஜ்மஹால். அதை அழகை சொல்ல வார்த்தைகளே கிடையாது. அதனால் தான் அதன் அழகை நேரில் கண்டு ரசிக்க மக்கள் குவிகின்றனர். ஆனால் அந்த அழகையே மிஞ்சும் அளவுக்கு துபாயில் ஒரு பங்களா இருக்கிறதாம். துபாயில் வெர்சாய்ஸில் என்ற இடத்தில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இதனை "மார்பிள் பேலஸ்" என்றும் அழைக்கிறார்கள். 

25

இந்த மாளிகை முழுக்கவும் இத்தாலிய மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தின் விலையைக் கேட்டால் ஆடி போய்விடுவீர்கள். அதாவது 750 மில்லியன் திர்ஹம்கள்... நம் நாட்டு பணமதிப்பில் 1,600 கோடி ரூபாய் ஆகும். அப்படி இந்த மாளிகைக்கு என்ன சிறப்பு இருக்கிறது? வாங்க பார்க்கலாம்.

35

இந்த மாளிகை கிட்டத்தட்ட 60 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் பெரியதாக கட்டப்பட்டுள்ளது. படுக்கையறைக்கு 4,000 சதுர அடி ஒதுக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் தான் உணவு உண்ணும் அறை, சமையலறை போன்ற அறைகள் உள்ளன. கழிவறைகள் 19 உள்ளன. 15-கார் கேரேஜ், உள்புறம் மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் ஆகியவையும் உள்ளன. 

45

இங்கு 2 மொட்டை மாடிகளும் உள்ளன. விருந்தினர் அறையை பொறுத்தவரை ஆயிரம் சதுர அடி, 2ஆவது பெரிய படுக்கையறை 2,500 சதுர அடியாம். இந்த மாளிகையைக் கட்டி முடிக்க 12 வருடங்களாகியுள்ளது. இதன் சுற்றுவட்டாரத்தில் தான் எமிரேட்ஸ் ஹில்ஸ் அமைந்துள்ளதால், இந்த வீட்டை வாங்க பலர் போட்டிப் போடுகிறார்கள். 

இதையும் படிங்க: உங்க வீட்டுல பெட்டி பெட்டியாக பணம் குவியணுமா? இந்த 4 விஷயங்களை தவறாமல் பண்ணி பாருங்க!! நிச்சயம் பலன் உண்டு

55

இந்த மாளிகை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதனை வாங்க பலரும் ஆசைப்பட்டாலும் விலை காரணமாக கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றனர். விற்பனை அறிவிப்பு வெளியாகி 3 வாரத்தில் 2 பேர் மட்டுமே மாளிகையை பார்த்துள்ளனர். அதில் இந்தியர் என்றும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: உலக பணக்காரர் மனைவி என்றாலும் ஒரு கணக்கில்லையா? தலை சுற்ற வைக்கும் நீதா அம்பானியின் ஹேண்ட் பேக் விலை!!

click me!

Recommended Stories