முக்கனிகளில் முதன்மையான மாம்பழ ருசிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அதனால் தான் பழங்களின் அரசன் என மக்கள் அதனை கொண்டாடுகின்றனர். மல்கோவா, அல்போன்சா, ருமேனியா, பங்கனபள்ளி, இமாயத், செந்தூரம், கல்லா, நார் மாம்பழம், மனோரஞ்சிதம், காளையபாடி, காசா என மாம்பழ வகைகளை அடிக்கொண்டே செல்லலாம்.
சுவையில் மட்டுமல்ல சத்துக்களிலும் மாம்பழம் கில்லி தான், பார்வை திறனை மேம்படுத்துதல், வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்தால் ரத்தச்சோகையைச் சரி செய்தல், நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், பாலிபீனால் ஃபிளேவனாய்டுகள் அதிகம் கொண்டது என எக்கச்சக்க மருந்துவ குணங்கள் இருந்தாலும் மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் ஒரு துண்டு கூட சுவைக்க கூடாது என மருத்துவர்கள் ஸ்க்ரிட் அட்வைஸ் கொடுப்பார்கள்.
அதற்கு காரணம் மாம்பழத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவு தான் காரணம். ஆனால் இயற்கையே ஆச்சர்யப்படும் அளவிற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த எம்.எச். பன்வார் ஃபார்ம்ஸ் பண்ணையைச் சேர்ந்த மாம்பழ நிபுணரான குலாம் சர்வார் சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடக்கூடிய ‘சுகர்ஃபிரீ’ மாம்பழங்களை விளைவித்துள்ளார்.
சோனாரோ, க்ளென், கீட் என இந்த மாம்பழங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. சிந்துரி மற்றும் சவுன்ஸ் வகை மாம்பழங்களில் 12 முதல் 15 சதவீதம் வரை சர்க்கரை அளவு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதை தவிர்க்கின்றனர்.
ஆனால் தங்கள் பண்ணையில் உள்ள சில மாம்பழங்களில் 4 முதல் 5 சதவீதம் மட்டுமே சர்க்கரை அளவு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், கீட் வகை மாம்பழத்தில் 4.7 சதவீதம் மட்டுமே சர்ச்சை அளவு உள்ளது. சொனாரோ, க்ளேன் வகை மாம்பழங்களில் 5.6 மற்றும் 6 சதவீதம் சர்க்கரை அளவு மட்டுமே உள்ளது எனக்கூறியுள்ளார்.
ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி சுவைக்க வேண்டும் என்பதற்காக கிலோ ரூ.150 என மிகக் குறைந்த விலையில் பாகிஸ்தான் சந்தைகளில் இந்த மாம்பழங்களை விற்பனை செய்து வருவது கூடுதல் சிறப்பு.