இதை எல்லாம் செஞ்சது சிலந்திகள் என்றால் நம்ப முடியுதா?... ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அரிய போட்டோஸ்...!

First Published | Jun 17, 2021, 5:31 PM IST

ஆஸ்திரேலியாவில் ஏராளமான சிலந்திகள் கிலோ மீட்டர் கணக்கில் பின்னியுள்ள பிரம்மாண்ட வலை மக்களை பிரம்பிப்பிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் ஏராளமான சிலந்திகள் கிலோ மீட்டர் கணக்கில் பின்னியுள்ள பிரம்மாண்ட வலை மக்களை பிரம்பிப்பிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகவே கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்போது அந்த பகுதிகளில் வெள்ளங்கள் முற்றிலும் வடிந்த நிலையில் அப்பகுதி மக்களை மற்றொரு அச்சம் சூழ்ந்துள்ளது.
Tap to resize

கிப்ஸ்லாந்தின் பல பகுதிகளில் சிலந்தி வலைகள் போர்வை போல சில கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்னப்பட்டுள்ளது போல் காணப்படுகிறது. பார்க்க ட்ரான்ஸ்பிரண்ட் நெட்டை போர்த்தியது போல் புல்வெளிகள் அழகாக காட்சியளிக்கின்றன.
புல்வெளிகள் மட்டுமின்றி செடி, கொடி, மரம், மின் கம்பங்கள் என பார்க்கும் திசையெல்லாம் வெள்ளை நிற சிலந்தி வலையால் மூடப்பட்டுள்ளது. பார்க்க இவைகள் அழகாக இருந்தாலும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியதையும் மறுப்பதற்கில்லை.
ஆஸ்திரேலியா நிபுணர்கள் மற்றும் உள்ளூர் ஆய்வாளர்கள், இந்த சிலந்திகளால் எவ்வித தீங்கும் இல்லை என்றும், வெள்ளத்தால் தண்ணீருக்குள் மூழ்காமல் இருக்க இப்படி மாஸான சிலந்தி வலையை உருவாக்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
பெரு வெள்ளத்திற்கு அஞ்சி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி படையெடுப்பதைப் போலவே, வெள்ளத்தில் இருந்து தப்பிக்க சிலந்திகளும் தடிமனான வலையை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!