கடவுள் பூமியில் இருப்பது உண்மை என்றால், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கெட்ட சக்தி இந்த பூமியில் இருப்பது உண்மை ஆகும். ஆம், வீட்டில் எப்போதும் சிலருக்கு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். என்னதான் மருத்துவரை பார்த்து சிகிக்சை மேற்கொண்டாலும் நம்மை விட்டு பிரச்சனை நீங்கவே நீங்காது. சிலருக்கு பண இழப்பு , சிலருக்கு தொழில் இழப்பு இருக்கும். அதற்கு அமானுஷ்ய கெட்ட சக்திகள் வீட்டில் உலா வருவது, கழிப்பை தாண்டுவது, கண் திருஷ்டி, போன்றவை காரணம் என்பார்கள். என்னதான் கோடி கோடியாய் பணம் செலவழித்தாலும் இதற்கு தீர்வே இருக்காது. எனவே, இதை சரி செய்ய எலுமிச்சம் பழத்தை வைத்து ஒரு சின்ன பரிகாரம் செய்தால் இந்த பிரச்சனை உடனடியாக தீரும்.