Published : Sep 28, 2022, 01:27 PM ISTUpdated : Sep 28, 2022, 04:08 PM IST
October Month Horoscope 2022: அக்டோபர் மாதம் நிகழும் கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த மாதத்தில் மிகவும் சிறப்பான பலன்களை பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
அக்டோபர் மாதம் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. குறிப்பாக, அன்னை லட்சுமியின் ஆசீர்வாதத்தையும், குபேரரின் அருளையும் பெற இந்த மாதம் மிக சிறந்த மாதமாக இருக்கும். மேலும், இந்த மாதத்தில் நவராத்திரி, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் வர இருக்கிறது. இந்த மாதம் நிகழும், கிரகங்களின் மாற்றத்தால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருளால் பணமும், தொழிலில் முன்னேற்றமும் பரி பூரணமாக கிடைக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்னும் சிலநாட்களில் அக்டோபர் மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். முதலீடு மிகவும் சாதகமாக இருக்கும். பணம் செலவழித்து நிறைய சம்பாதிப்பீர்கள். வருமானம் கூடும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். சொத்துக்களில் முதலீடு செய்ய நல்ல நேரம்.
36
October Month Horoscope 2022:
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் மாதம் சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்களது கடின உழைப்பின் முழு பலனை நீங்கள் பெறுவீர்கள். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.
46
October Month Horoscope 2022:
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பல நன்மைகளைத் தரும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாம். புதிய வாய்ப்புகள் வரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். மொத்தத்தில் இந்த நேரம் லாபத்தை மட்டுமே தரும்.வாழ்க்கை துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மகிழ்ச்சியாக இருக்கும். தேர்வில் வெற்றி உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும் ஆனால் வருமானமும் அதிகரிக்கும். எதிர்பார்க்காத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.