New Year traditions: அதிர்ஷ்டம் தரும் புள்ளி போட்ட சட்டை உலக நாடுகளின் வினோத புத்தாண்டு கொண்டாட்டம்!

First Published | Dec 31, 2022, 5:52 PM IST

புத்தாண்டு ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வகைகளில் கொண்டாடப்படுகின்றது. அதில் சில நாடுகளின் கொண்டாட்டங்கள் குறித்து இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு கலாச்சாரம், மதம், புவியியல் அமைப்பிற்கும் அப்பாற்பட்டு மக்களை ஒன்றிணைக்கும் விடுமுறை தினம் புத்தாண்டு. இந்த முறை வார விடுமுறையுடன் புத்தாண்டு தினம் வருவது மக்களிடையே உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஒட்டு மொத்த மக்களும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் இந்நேரத்தில், சில நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் குறித்து இங்கு காணலாம். 

இதையும் படிங்க; New year 2023: இந்த பொருளை பாக்கெட்ல போட்டுக்கோங்க... புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெருகும்!

அமெரிக்கா 

உலக நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டம் தனித்துவமானது. அங்குள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு தினத்தில் ஏராளமான மக்கள் கூடுவர். பல வண்ண விளக்குகளால் ஒளிரும் நள்ளிரவில் அளவில் பெரிதான மின்னும் பந்துகளை கம்பத்தில் இருந்து கீழே விடுவார்கள். டிசம்பர் 31ஆம் தேதி இரவு நிகழும் இந்த வழக்கங்களை நியூயார்க் டைம்ஸ் உரிமையாளர் அடால்ப் ஓக்ஸ் 1907ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தினார். 

கிரீஸ் 

கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டின் கதவுகளில் வெங்காயத்தை தொங்கவிடுவதன் மூலம் புத்தாண்டு வரவேற்கின்றனர். அவர்கள் வெங்காயத்தை வளர்ச்சியின் அடையாளமாக கருதுகின்றனர். 

Tap to resize

ஸ்பெயின் 

கிரேக்கர்கள் வெங்காயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது போல ஸ்பெயின் நாட்டவர்கள் கால்பந்திற்கு முக்கியத்துவம் அளிப்பர். புத்தாண்டில் 12 திராட்சை பழங்களை உண்பது நல்ல அதிர்ஷ்டத்தையும், செழுமையையும் அளிக்கும் என நம்பப்படுகிறது. புத்தாண்டு பிறந்த 12 நொடிகளில் இதை சாப்பிட்டு முடித்தால் தான் பலிக்குமாம். இந்த வழக்கம் 19ஆம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இது மாதிரியான திராட்சை உண்ணும் வழக்கம் மெக்சிகோவிலும் உள்ளது. 

டென்மார்க் 

இந்த உலகில் யாருமே கொண்டாடாத வகையில் புதுமையான முறையில் டென்மார்க்கை சேர்ந்தவர்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு தொடங்கும் முன்னர் நாற்காலியில் ஏறி நின்று கொண்டு துல்லியமாக 12 மணிக்கு கீழே குதித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். இப்படி செய்வதால் தீய ஆவிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என நம்புகின்றனர். 

ஜப்பான்

'பழையன கழிந்து புதியன புகுதல்' என்ற வழக்கத்தின்படி, புத்தாண்டு அன்று ஜப்பானியர்கள் சூடான நூடுல்ஸை சுவைத்து உண்ணுகின்றனர். புதிய ஆண்டில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகின்றனர். 

பிலிப்பைன்ஸ்

இந்த நாட்டில் புத்தாண்டு அன்று எங்கு பார்த்தாலும் வட்ட வடிவமான பொருள்களை காண முடியும். இது செழிப்பை குறிப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். புத்தாண்டு தினத்தன்று வட்டவடிவில் புள்ளியிடப்பட்ட ஆடைகளைத் தான் அவர்கள் பெரும்பாலும் அணிந்து கொள்கின்றனர். இரவு உணவில் கூட வட்ட வடிவமான பழங்களை முதன்மையாக வைக்கிறார்கள். 

Latest Videos

click me!