New Year 2024: புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டால் வழக்கு! எச்சரித்த போக்குவரத்து காவல்துறை!

First Published | Dec 30, 2023, 2:04 PM IST

2024 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், வழக்கு பதியப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
 

ஓவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1-ஆம் தேதியை... இரவு 12 மணிக்கு கேக் வெட்டி... ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் வரவேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர் இளம் ரசிகர்கள். 
 

New Year Celebration

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சென்னை, புதுவை, போன்ற இடங்களில் நைட் பார்ட்டி, டான்ஸ், போன்ற பல நிகழ்ச்சிகள் அரங்கேறுவது வழக்கமான ஒன்று. அதே போல் பல இளம் ரசிகர்கள் பீச், பார்க், போன்ற பொது இடங்களில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

போங்காட்டம் ஆடும் பிக்பாஸ்.! எலிமினேஷனின் நடந்த ட்விட்? முக்கிய போட்டியாளர் வெளியேற்றப்பட்டதால் அதிர்ச்சி!

Latest Videos


மேலும் சிலர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில், இரவு நேரங்களில்... சாலைகளில் அதிக ஒளி எழுப்பி கொண்டு வண்டிகளில் அதி வேகமாக செல்வதால், பிறருக்கு இடைஞ்சல்கள் ஏற்படுவதோடு, பல விபத்துகளும் நடக்க நேரிடுகிறது.
 

இதுபோன்ற விபத்தை தடுக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு, விதிமீறல்களில் ஈடுபட்டால் வழக்கு பதியப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Yuvan: பட வாய்ப்பை பிடிக்க விஜய் டிவி சீரியலில் கதாநாயகனாக களமிறங்கும் மயில்சாமி மகன்! ஹீரோயின் யார் தெரியுமா?
 

இதுகுறித்து, சென்னை பெருநகர காவல் துறையின், போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள தகவலில், "விதிமுறைகளை மீறும் வாகனங்கள், ஏஎன்பிஆா் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப் பதியப்படும் என தெரிவித்துள்ளது. 
 

Chennai Traffic Police

அதே போல் புத்தாண்டு கொண்டாட்டத்தில், அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், சாகசம் செய்யும் நோக்கத்துடன் வாகனம் ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் 3 போ் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமுறை மீறலில் ஈடுபடுகிறவா்களை இந்த கேமராக்கள் கண்டறிந்து மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்படும். எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளைக் கடைப்பிடித்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புத்தாண்டு கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!

click me!