Navaratri dressing: சமந்தா முதல் ரஷ்மிகா மந்தனா வரை..நவராத்திரி பண்டிகைக்கு அணிந்திருந்த ஸ்டைலிஷ் ஆடைகள்..

Published : Sep 28, 2022, 02:55 PM IST

Navaratri dressing: நவராத்திரி பண்டிகை நாட்களில், உங்களை நீங்கள் மேலும் அழகு படுத்த விரும்பினால் சமந்தா முதல் ரஷ்மிகா மந்தனா வரை அணிந்திருந்த  சில ஸ்டைல்ஆடை வடிவமைப்புகள் ​​பற்றி இங்கே பார்க்கலாம்.

PREV
15
Navaratri dressing: சமந்தா முதல் ரஷ்மிகா மந்தனா வரை..நவராத்திரி பண்டிகைக்கு அணிந்திருந்த ஸ்டைலிஷ் ஆடைகள்..

இன்றைய காலத்தில் ஃபேஷன் உடைகளை விரும்பி அணிகின்றனர். இன்று பெரும்பாலான மக்கள் சமூக வலைதளங்களில், அழகு, ஃபேஷன் உடைகளை தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் வலம் வரும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஃபேஷன் உடைகளை ஏராளமாக வாங்கி குவிகின்றனர்.

 

25

அதிலும், நடிகைகளின் உடைகளில் எப்போதும் நமக்கு ஒரு வித ஆசை இருக்கும். அதனை நாம் அணிந்திருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற எண்ணம் தோன்றும்.  ஒவ்வொரு பண்டிகை என்று வரும் போது ஒவ்வொரு விதமான ஆடைகள் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில், இந்த  2022 ஆம் ஆண்டின் நவராத்திரி பிரபலனமான பிரபலமான ஆடைகளை பற்றி பார்ப்போம்.


ராஷ்மிகா மந்தனா

ரஷ்மிகா மந்தனா அணிந்திருந்த பட்டியாலா உடை மிகவும் நேர்தியானவை. உடைக்கு தேவையான அணிகலன்கள்அவரின் தோற்றத்தைக் கூட்டின.
 

35

கீர்த்தி சுரேஷ்: 

தென் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் நவராத்திரி பண்டிகைக்கு அணிந்திருந்த வெள்ளை நிறம் மிகவும் எளிதாகவும், வசீகர தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. வெள்ளை நிறம் தூய்மை மற்றும் அமைதியைக் குறிக்கிறது.  
 

45

சமந்தா:

மகிழ்ச்சியை குறிக்கும் மஞ்சள் நிற உடையில் தேவதை போன்று காட்சி தருகிறார். அதற்கு ஏற்ற சிம்பிள் அணிகலன் சிறந்த தேர்வாகும். நீங்கள் நவராத்திரி நாளில், குடும்ப குத்து விளக்காக ஜொலிக்க விரும்பினால் இந்த மஞ்சள் உடை சிறந்த தேர்வாகும்.

ஸ்ரீநிதி ஷெட்டி

 KGF நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி சிவப்பு நிற உடையை தேர்வு செய்துள்ளார். அவரின் கண்ணாடி மற்றும் எம்பிராய்டரி வேலைகள் கொண்ட உடைகள் நவராத்திரி நாளில்  பொருத்தமான ஒன்றாகும்.

55

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் அணிந்திருந்த கண்ணாடி போன்ற உடை பார்ப்பவர்  மத்தியில் வசீகரத்தை கூட்டுகிறது. எனவே, இந்த நவராத்திரி பண்டிகைக்கு உங்களுக்கு பிடித்தமான உடை இதில் இருந்தால் தேர்வு செய்யுங்கள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories