
நேச்சுரல் பியூட்டி என்று அழைக்கப்படும் சாய் பல்லவிக்கு தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தனது இயல்பான நடிப்பு, அழகான நடனம் மட்டுமல்ல, தனது அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர். மற்ற நடிகைகள் போல அதிக ஒப்பனை செய்வதில்லை. வெளியில் மட்டுமல்ல, படத்திலும் சிம்பிள் மேக்கப் மட்டுமே போட்டிருப்பார். கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டார். அப்படியானால், இவை எதுவுமின்றி எப்படி அவர் அழகாக இருக்கிறார்? அவரது அழகு ரகசியம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
சாய் பல்லவி தன்னை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தாலும், உடற்பயிற்சியை விடுவதில்லை. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல், முக அழகும் கூடுகிறது. உடலுக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது. அவர் உடற்பயிற்சியுடன், யோகாவும் செய்கிறார். தனக்குப் பிடித்த நடனத்தையும் தொடர்ந்து பயிற்சி செய்கிறார். நடனமும் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்பதைச் சொல்லத் தேவையில்லை.
சாய் பல்லவி தனது சருமம் வறண்டு போகாமல், ஈரப்பதமாக வைத்திருக்க அதிக அளவில் தண்ணீர் குடிக்கிறார். வெறும் தண்ணீர் மட்டுமல்லாமல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் அதிகம் சாப்பிடுகிறார். இதனால் சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்கும். இதனாலும் சருமம் பொலிவோடு காணப்படுகிறது.
என்ன நெல்லிக்காயை தலைமுடிக்கு யூஸ் பண்ணா முடி கொட்டாதா? வளருமா?!
சாய் பல்லவி கெமிக்கல் கலந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதில்லை. படத்திற்காகக் கூட எந்த ஒப்பனையும் செய்வதில்லை. இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார். இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் அவரின் சருமம் பாதிக்கப்படுவதில்லை. இயற்கையான அழகைத் தருகிறது. தான் ஒப்பனை செய்து கொள்வதில்லை என்று பல சந்தர்ப்பங்களில் அவர் கூறியுள்ளார்.
சாய் பல்லவியின் கூந்தலும் அவரது அழகை இரட்டிப்பாக்குகிறது. கூந்தல் பராமரிப்புக்கும் ரசாயனம் கலந்த ஷாம்புகள், கிரீம்களைப் பயன்படுத்துவதில்லை. ஆம் அவர் சீயக்காய், போன்ற இயற்கைப் பொருட்களை மட்டுமே தலைமுடிக்கு பயன்படுத்துகிறார். அதனால்தான் அவரது கூந்தல் ஆரோக்கியமாக இருக்கிறது.
ஹீரோயின் போல பளபளப்பான சருமத்திற்கு.. இந்த தயிர் பேஸ் பேக்களை ட்ரை பண்ணுங்க!
மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவை உட்கொள்வது சாய் பல்லவியின் அழகுக்கு மற்றொரு காரணம். நம் முகமும், உடலும் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் காட்டும். நல்லதைச் சாப்பிடுங்கள். நல்லதைப் பேசுங்கள். அப்போது உள்ளும், புறமும் அழகாக இருப்பீர்கள். தனது உணவில் எப்போதும் பழங்கள், காய்கறிகள் இருப்பதை சாய் பல்லவி உறுதி செய்கிறார். சரிவிகித உணவை உட்கொள்கிறார். அதனால்தான் அவர் இயற்கையாகவே அழகாக இருக்கிறார்.