Grand Parents Day 2022: தாத்தா பாட்டி தினம்..குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டிகளிடம் வளர வேண்டும் தெரியுமா..?

First Published Sep 11, 2022, 11:52 AM IST

Grand Parents Day 2022: குழந்தைகளுக்கு நற்பண்புகள் மற்றும் கல்வி கற்றுக்கொடுப்பது, நீதி நெறிகளைப் புகட்டுவது, இரக்கம், அன்பு, நம்பிக்கை ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதில் இன்றைய நவீன காலத்து தாத்தா, பாட்டிகள் பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்

Grand Parents Day 2022:

இன்றைய நவீன காலத்து தாத்தா, பாட்டிகளில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள், வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் அதனால், பேரக்குழந்தைகளுக்குக் கண்டிப்புடன் கல்வியை கற்றுக் கொடுப்பதில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள், விருப்பங்களை தாத்தா, பாட்டிகளோடு தயங்காமல் பகிர்ந்து கொள்வார்கள். மேலும், குழந்தை பருவத்தை சுவாரசியமாக்குவதில் தாத்தா, பாட்டிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

மேலும் படிக்க,....Bharathiyar Memorial Day: பாரதியார் நினைவு தினம் இன்று..மகாகவி பாரதியாரின் சிறப்புகள் பற்றிய சுவாரஸ்யமான பதிவு

Grand Parents Day 2022:

 இன்றைய தாத்தா பாட்டிகளைச் சுற்றி பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.  தாத்தா, பாட்டிகள் மிகவும் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், வெள்ளை முடியுடன், எப்போதும் 'வாக்கிங் ஸ்டிக்ஸ்' (walking sticks) உதவியுடன் மட்டுமே நடக்க முடியும் என்பது போன்றும் சித்தரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க,....Bharathiyar Memorial Day: பாரதியார் நினைவு தினம் இன்று..மகாகவி பாரதியாரின் சிறப்புகள் பற்றிய சுவாரஸ்யமான பதிவு

Grand Parents Day 2022:

ஆனால், உண்மையில் மற்ற குழந்தைகளை விட தாத்தா, பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபணமாகியுள்ளது.அவர்களிடம் வளரும் குழந்தைகள் பெரியவர்களிடமும், அறிமுகம் இல்லாதவர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

Grand Parents Day 2022:

அவர்கள் கூறும் கதைகள் மற்றும் அவற்றில் உள்ள நீதி போன்றவை பிள்ளைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தாத்தா, பாட்டியிடம் நீதி நெறிமுறைகளைப் பிள்ளைகள் கற்றுக்கொள்வதால் சமுதாயத்தில் மரியாதை மிக்க, புரிதல் உள்ள அழகான பிள்ளைகளாக அவர்கள் வளர முடிகிறது.

Grand Parents Day 2022:

தாத்தா, பாட்டிகளுடன் வளரும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட தனிமை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை எளிதில் கையாளும் திறமை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், உறவுகளின் உன்னதத்தையும் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். எனவே, இதனை பெற்றோர் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை தாத்தா, பாட்டியுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் தனிமை விலகி இனிமை நிலவும்.

மேலும் படிக்க,....Bharathiyar Memorial Day: பாரதியார் நினைவு தினம் இன்று..மகாகவி பாரதியாரின் சிறப்புகள் பற்றிய சுவாரஸ்யமான பதிவு

click me!