Published : Feb 03, 2025, 04:59 PM ISTUpdated : Feb 03, 2025, 05:04 PM IST
Morning Habits For Kids : உங்கள் குழந்தை புத்திசாலியாக வளர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், தினமும் காலையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களில் மட்டும் அவர்களை பழக்கப்படுத்துங்கள்.
உங்க குழந்தை புத்திசாலியாக இருக்கனுமா? அப்போ காலையில 'இப்படி' பழக்குங்க!!
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் புத்திசாலித்தனமாக தான் வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள். குழந்தைகள் புத்திசாலித்தனமாக இருந்தால் தான் கல்வி மற்றும் அறிவாற்றல் திறனானது மேம்படும். இது அவர்களது எதிர்காலத்திற்கான அடித்தளம் ஆகும். குழந்தைகளை சிறந்த எதிர்காலத்தை தயார்ப்படுத்துவதற்கு ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்பதால், உங்கள் குழந்தையின் நாளின் தொடக்கம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். எனவே உங்கள் குழந்தையின் புத்தி கூர்மை அதிகரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில காலை பழக்க வழக்கங்களில் பழக்கப்படுத்துங்கள். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
காலை உடற்பயிற்சி:
உங்கள் குழந்தையை காலை நேர உடற்பயிற்சியில் பழகுவதன் மூலம் அதனால் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் அவர்கள் நாள் முழுவதும் ஆற்றலாக இருப்பார்கள். அதாவது மனரீதியாக மற்றும் உன் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதற்கு நீங்கள் யோகா, ஜாக்கிங், நடைபயிற்சி போன்ற சிறிய உடல் பயிற்சி செய்ய அவர்களை பழக்கப்படுத்துங்கள்.
ஆரோக்கியமான காலை உணவு:
குழந்தைக்கு கொடுக்கும் காலை உணவு ஆரோக்கியமாக இருந்தால் அது அவர்களின் மூளைக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, நினைவாற்றல் செயல்பாட்டையும் பராமரிக்கும். எனவே, சத்தான உணவுகளுடன் உங்கள் குழந்தையின் நாளை தொடங்க அவர்களை பழக்கப்படுத்துங்கள். இதற்கு நீங்கள் அவர்களுக்கு ஓட்ஸ் கோதுமை போன்ற முழு தானியங்கள் புரதம் நிறைந்த உணவுகளை அவர்களுக்கு கொடுக்கலாம். இது அவர்களை ஆற்றலுடன் வைத்திருக்கும்.
35
காலையில் படிக்கும் பழக்கம்:
உங்கள் குழந்தையை தினமும் காலை படிக்கும் பழக்கத்தை பழக்கப்படுத்துங்கள். குழந்தைகளுக்கு பிடித்த நாவல், புத்தகம் போன்ற எதுவாக இருந்தாலும் வாசிக்கும் பழக்கத்தை அவர்களது நாளில் ஒரு பகுதியாக மாற்றுங்கள். இதனால் அவர்களது அறிவாற்றல் அதிகரிக்கும்.
தியானம்:
உங்கள் குழந்தையை தியானம் போன்ற பயிற்சியில் பழக்கப்படுத்துங்கள். இது குறுகிய நினைவாற்றல் பயிற்சி என்றாலும் உங்கள் குழந்தையின் மன அழுத்தத்தை நிர்வகிக்க பெரிதும் உதவும். தினமும் காலை சிறிது நிமிடங்கள் இப்படி செய்வதன் மூலம் நாள் முழுவதும் அவர்களை நினைவாற்றலுடனும் உற்சாகத்துடன் வைக்க உதவும்.
45
இசை கேட்க பழக்கப்படுத்துங்கள்:
பொதுவாக இசை கேட்பது மூளையின் செயல்பாட்டை தூண்டும் மனநிலையை மகிழ்ச்சியாக வைக்கும் மற்றும் நினைவகத்தை மேம்படுத்தும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. உங்கள் குழந்தையின் காலை வழக்கத்தில் அமைதியான அல்லது ஊட்டமளிக்கும் இசையை கேட்க பழக்கப்படுத்துங்கள். இதனால் அவர்கள் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பார்கள்.
இயற்கையுடன் செலவிட கற்றுக்கொடுங்கள்:
குழந்தைகள் காலை சிறிது நேரம் இயற்கையுடன் செலவிட்டால் அவர்களது அவர் உருவாற்றல் வளர்ச்சிக்கு பல நன்மைகளை வழங்கும். இதற்கு நீங்கள் அவர்களை பூங்காவிற்கு அழைத்துச் செல்லலாம் அல்லது உங்கள் வீட்டு மாடி தோட்டத்தை சுற்றி வர சொல்லுங்கள். இதனால் அவர்களுக்குள் ஆர்வம் அதிகரிக்கும். அதிக விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். போனால் இது அவர்களின் சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும்.
குழந்தையின் புத்திக்கூர்மை அதிகரிக்க, காலையில் அவர்களுக்கு மொபைல் போன் மற்றும் டிவி போன்றவற்றில் இருந்து அவர்களை விலக்கி வையுங்கள். இவை அவர்களுக்கு கவனம் சிதறலை ஏற்படுத்தும்.