ஒருநாள் உண்மையும் பொய்யும் இரண்டும் நடந்து கொண்டிருந்தன. பொய், மாய வார்த்தைகளைச் சொல்லி, யாரையாவது ஏமாற்ற வேண்டுமா? எப்படி நம்ப வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. ஆனால் உண்மை, உண்மையை மட்டுமே பேசுகிறது. ஏமாற்றும் பழக்கம் கொண்ட பொய், உண்மையையும் ஏமாற்ற முடிவு செய்கிறது. அப்படி நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு ஏரி வருகிறது. உடனே பொய், 'ரொம்ப சூடாக இருக்கு. இந்த ஏரியில் குளிப்போம்' என்று உண்மையிடம் சொல்கிறது.