தேவைக்கு அதிகமாக கண்டிப்பு
குழந்தைகளை கண்டிக்க வேண்டியது அவசியம் தான். அதிக கண்டிப்பு குழந்தைகளின் மனநிலையை மோசமாக பாதிக்கும். அவர்கள் பலவீனமானவர்களாக உணர தொடங்குவார்கள். இதனால் பல சமயங்களில் குழந்தையால் பள்ளியில் சரியாக படிக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரம் குழந்தைகளுக்கு அதிக செல்லமும் கொடுக்கக்கூடாது. குழந்தைகளிடம் கண்டிப்பு மற்றும் அதிகப்படியான செல்லம் இரண்டும் அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
அதிக எதிர்பார்ப்பு
குழந்தைகள் எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களை செய்ய வேண்டும் என்று பல பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் சில விஷயங்களை குழந்தைகள் சரியாக செய்வதில்லை. ஒரு குழந்தையிடம் எல்லா நேரத்திலும் முழுமையை எதிர்பார்ப்பது தவறு. ஒரு குழந்தை எல்லாவற்றையும் சரியான முறையில் செய்ய முடியாது. பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு செய்ய முடியாத குழந்தைகள் மனதை மோசமாக பாதிக்கும். ஆனால் இதுபோன்ற சூழலில் குழந்தைகளை திட்டக்கூடாது. அடுத்தமுறை சரியாக செய்து கொள்ளலாம் என்று அவர்களை ஊக்குவிக்கவும்