Grey Hair: சின்ன வயசுலயே நரை முடி வந்துடுச்சா? உடனே மார்க்கெட்ல கிடைக்கிற கலர் வாங்கி பூசிக்கிறீங்களா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணா, உங்க முடி கருப்பா பளபளக்கும்.
இப்போலாம் சின்னவங்க, பெரியவங்கன்னு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் நரை முடி வருது. நரை முடி வயசானதால மட்டும் வர்றதில்ல. மன அழுத்தம், சத்துக்குறைபாடு, கெமிக்கல் கலந்த ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்துறதுனாலும் சின்ன வயசுலயே முடி நரைச்சுப் போகுது. ஆனா, நரை முடியை யாரும் ஏத்துக்கிறது இல்ல. வயசான மாதிரி தெரியுதேன்னு கவலைப்படுவாங்க. அதனால, உடனே அதை மறைக்க முயற்சி பண்ணுவாங்க. ஆனா, அதனால முடி இன்னும் அதிகமாக பாதிப்படையும். நரை முடியும் அதிகமாகும். ஆனா, இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணா, நரை முடிப் பிரச்னை இருக்காது.
23
நரை முடிக்கு சீக்ரெட் இலை
நமக்கு புதினா இலைகள் ஃப்ரெஷ்ஷா சுலபமா கிடைக்கும். இதை வெச்சே நரை முடிப் பிரச்னைக்கு தீர்வு காணலாம். இதுவரைக்கும் புதினாவை சமையலுக்கு மட்டும்தான் நாம பயன்படுத்தியிருக்கோம். இப்போ, நம்ம அழகை அதிகரிக்க இந்த இலையை எப்படி பயன்படுத்துறதுன்னு பார்க்கலாம். ஃப்ரெஷ்ஷான புதினா இலைகளை அதோட தண்டு உட்பட எடுத்துக்கோங்க. புதினா தண்டுலயும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. இதை நல்லா கழுவி, கொஞ்சம் தண்ணி விட்டு மிக்ஸியில பேஸ்ட்டா அரைச்சுக்கணும். இந்த பேஸ்ட்டை முடியோட வேர்க்கால்கள்ல இருந்து நுனி வரைக்கும் தடவணும். குறிப்பா, நரை முடி அதிகமா இருக்குற இடத்துல தடவுங்க. இந்த பேக்கை குறைஞ்சது 30-லிருந்து 45 நிமிஷம் வரைக்கும் அப்படியே விட்டுடுங்க. அதுக்கப்புறம், சீயக்காய் வெச்சு தலையை அலசுனா போதும்.
33
முடியோட இயற்கையான கருப்பு நிறம் திரும்ப வர வாய்ப்பு
புதினாவுல 'மென்தால்' அப்படிங்கிற ஒரு வேதிப்பொருள் இருக்கு. இது தலையில ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால, முடி வளர்ச்சிக்கு இது ரொம்ப உதவியா இருக்கும். அதுமட்டுமில்லாம, முடி கருப்பா பளபளப்பா இருக்கத் தேவையான வைட்டமின்களையும் இது கொடுக்குது. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினா, முடியோட இயற்கையான கருப்பு நிறம் திரும்ப வர வாய்ப்பு இருக்கு. புதினாவுல இருக்குற ஆன்டி-பாக்டீரியல் குணங்கள், தலையில பொடுகைக் குறைச்சு, முடி கொட்டுறதைத் தடுக்கும். கோடை காலத்துல இந்த புதினா பேக், தலைக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.