ஆம், இது தொடர்பாக சமீபத்திய ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 'ஒய்' குரோமோசோம் இழப்பு ஆண்களுக்கு இதயக் கோளாறு ஏற்பட முக்கியக் காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித செல் 23 ஜோடி குரோமோசோம்களைக் கொண்டுள்ளது. இது ஒரு நபர் ஆணோ பெண்ணோ என்பதை தீர்மானிக்கிறது. ஒரு பெண்ணுக்கு இரண்டு X குரோமோசோம்கள் (XX) உள்ளன. ஒரு ஆணுக்கு ஒரு X மற்றும் ஒரு Y (XY) உள்ளது. எனவே, 'ஒய்' குரோமோசோம் என்பது ஆண்களின் குரோமோசோமாக அறியப்படுகிறது.