எடை அதிகரிப்பு:
உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தரும், உலர் பழங்கள் தினமும் 250 கலோரி அளவு உட்கொள்வது ஒரு மாதத்தில் ஒரு கிலோ உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். இரண்டு பேரீச்சம் பழம், இரண்டு டேபிள்ஸ்பூன் புளூபெர்ரி, இரண்டு அத்திப்பழங்கள் சாப்பிடுவது சுமார் 60 கலோரிகளை உடலுக்கு வழங்கும். அதனால் சாப்பிடும் உலர் பழங்களின் கலோரி அளவை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் பழங்களை சாப்பிடுவது அவசியம்.