Published : Aug 28, 2022, 02:19 PM ISTUpdated : Aug 28, 2022, 02:28 PM IST
Lucky Zodiacs of September: இன்னும் 3 நாட்களில் 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் பிறக்கப்போகிறது. இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். யார் அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் என்பது தெரியுமா..? இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ஜோதிடத்தின் பார்வையில், ஒவ்வொரு மாதமும் நிகழும், கிரகங்கள் போன்றவற்றில் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.அந்தவகையில் செப்டம்பர் மாதத்தில் சூரியன் கிரகம் மற்றும் சுக்கிரன் கிரகம் தனது ராசியை மாற்ற போகின்றன. இந்த இரண்டு பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தென்படும். இதனால், குறிப்பிட்ட சிலரின் வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்கள் இருக்கும் .
25
Lucky Zodiacs of September:
செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மாதம் உங்களுக்கு எப்படி ? இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விருப்பமா..? அப்படியானால் உங்கள் ராசியும் இதில் இடம்பெற்றிருந்தால் நீங்கள் கொடுத்த வைத்தவர்கள் தான். அப்படியாக, 2022 செப்டம்பர் மாதம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் முழுவதும் மிகவும் சிறப்பாக இருக்கும். உழைப்பின் முழு பலன் உண்டு.திடீர் பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். தொழிலில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வீடு, சொத்து வாங்கும் யோகம் உருவாகலாம். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். இருப்பினும், பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் அதிகப்படியான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
45
Lucky Zodiacs of September:
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீண்ட தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும், வெற்றி கிடைக்கும். இந்த மாதம் தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் ஒற்றுமை பிறக்கும்.
செப்டம்பர் 2022 மீன ராசியினருக்கும் சிறப்பாக இருக்கும். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலன் கிடைக்கும். தொழிலில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். வாழ்வில் வளம் பெருகும்.