Vastu Tips
நாம் அணிந்திருக்கும் நகை ரொம்பவும் பழைசாகி சேதாரம் அடைந்து விட்டால், வெள்ளி போன்ற பொருட்கள் அறுந்து போய்விட்டால் அதை புதியதாக மாற்றுவதற்காக நகைகளை கழற்றி மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. இவை எல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயங்கள் தான். ஆனால், கஷ்டம் என்று வரும்போது உங்கள் உடம்பில் அணிந்திருக்கும் நகையை கழட்டி அடமானம் வைக்கும் போது சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Vastu Tips
முதலில், நகையை கழற்றி நன்றாக சுத்தம் செய்துவிட்டு ஒரு தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அவரவர் குலதெய்வத்தை நினைத்து ஒரு மஞ்சள் துணியில் 1 ரூபாய் காணிக்கை முடிந்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பிராத்தனையில், பொருளாதார நெருக்கடியால், இந்த நகையை கழற்றி இருக்கிறேன். என்னுடைய பண கஷ்ட்டம் தீர்ந்து கூடிய சீக்கிரம் இந்த நகையையுடன் சேர்த்து அதிக நகை வாங்கி, நான் மீண்டும் அணிந்து கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டும். மேலும், அந்த நகையை மாற்றி விட்டு, புதிய நகையாக வாங்கி நீங்கள் போட்டுக் கொள்வதாக இருந்தாலும் போட்டுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க ...Supermoon 2022: உங்களுக்கு சந்திரனின் நேரடி அருள் பெற வேண்டுமா? அப்படினா.. மறக்காமல் இன்று சந்திரனை பாருங்கள்
Vastu Tips
பிறகு நீங்கள் எப்போது குல தெய்வம் கோவிலுக்கு செல்கிறீர்களோ அப்போது, இதை அப்படியே எடுத்து போய் உண்டியலில் செலுத்தி விட்டு வர வேண்டும். ஆம் இனி நீங்கள் கஷ்ட்டம் ஏற்படும் நேரம் நகைகை கழற்றும்போது, இந்த பரிகாரம் முறையை பின்பற்றுங்கள் அப்போது தான் வீட்டில் செல்வம் பெருகும், பொன்னும் பொருளும் சேரும்..எனவே, இதை ஒருமுறை நீங்கள் பின்பற்றி பாருங்கள் இனி வீட்டில் கஷ்ட்டத்திற்காக நகையை கழற்ற வேண்டிய சூழ்நிலை வரவே வருது..