lemon peels for cleaning home: விலை உயர்ந்த கிளீனர்களுக்குப் பதில், வீணாகும் எலுமிச்சை தோல்களைக் கொண்டு சமையலறையை எளிய முறையில் சுத்தமாகவும் வாசனையாகவும் பராமரிக்கும் 8 பட்ஜெட் டிப்ஸ்.
நம்மில் பலர் எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு, அதன் தோலை யோசிக்காமல் குப்பைத் தொட்டியில் வீசிவிடுவோம். ஆனால், சமையலறையில் அன்றாடம் நாம் சந்திக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு இந்த எலுமிச்சை தோல்தான் மிகச்சிறந்த தீர்வு. விலை உயர்ந்த கிளீனர்களைக் காசு கொடுத்து வாங்காமல், நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டை மிச்சப்படுத்தும் 8 எளிய சமையலறை டிப்ஸ்கள் இதோ!
அரிசி டிரம்மில் வண்டு பிடிக்காமல் இருக்க, நிழலில் உலர்த்திய எலுமிச்சை தோல்களைப் போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாமல் நீண்ட நாட்கள் அரிசி பிரெஷ்ஷாக இருக்கும்.
சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்ப்பது பெரிய தலைவலி. நன்றாகக் காய்ந்த ஒரு துண்டு எலுமிச்சை தோலை சர்க்கரை டப்பாவுக்குள் போட்டு வைத்தால், அதன் வாசனைக்கு எறும்புகள் பக்கமே வராது. அதேபோல எறும்பு புகும் மற்ற மசாலா டப்பாக்களிலும் இதை செய்யலாம்.
59
மைக்ரோவேவ் ஓவன் சுத்தம் செய்ய
ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி, அதில் எலுமிச்சை தோல்களைப் போட்டு ஓவனில் 3 நிமிடம் சூடுபடுத்துங்கள். உள்ளே எழும் நீராவி எண்ணெய் பிசுக்கை இளக்கிவிடும். பின்னர் ஒரு துணியால் துடைத்தால் ஓவன் சுத்தமாகிவிடும்.
69
சில்வர் மற்றும் பித்தளைப் பாத்திரங்களைப் பளபளப்பாக்க
கருத்துப் போன பித்தளை விளக்குகள், செம்புப் பாத்திரங்கள் மற்றும் எண்ணெய் பிசுக்கு படிந்த சில்வர் பாத்திரங்களைத் தேய்க்க, எலுமிச்சை தோலில் சிறிது உப்பு அல்லது புளி தொட்டுத் தேய்த்தால் போதும். பாத்திரம் புதிது போல மின்னும்.
79
ஃபிரிட்ஜ் துர்நாற்றத்தை விரட்ட
ஃபிரிட்ஜில் காய்கறிகள், மீதமான குழம்பு வைக்கும்போது ஒருவித வாடை வரும். ஒரு சிறிய கிண்ணத்தில் 3-4 எலுமிச்சை தோல்களை வைத்து, அதன் மேல் சிறிது பேக்கிங் சோடா தூவி ஃபிரிட்ஜின் ஒரு மூலையில் வையுங்கள். கெட்ட வாடையை இது முழுமையாக உறிஞ்சிவிடும். அறையில் சுத்தமான காற்று வீசும் உணர்வு இருக்கும்.
89
மிக்ஸி பிளேடு கூர்மையாகவும், வாசனை இல்லாமலும் இருக்க
இஞ்சி, பூண்டு, மசாலா அரைத்தவுடன் மிக்ஸி ஜாரில் ஒருவித நெடி அடிக்கும். அதற்கு காய்ந்த எலுமிச்சை தோல்களை ஜாரில் போட்டு, சிறிது கல் உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றி விடுங்கள். பிளேடு கூர்மையாவதுடன், துர்நாற்றமும் சுத்தமாக நீங்கிவிடும்.
99
சிங்க் மற்றும் கவுண்டர் டாப் கறை நீங்க
சமையல் மேடையில் மஞ்சள் கறை, டீ கறை படிந்தால் கவலை வேண்டாம். எலுமிச்சை தோலால் அந்த இடத்தை நன்றாகத் தேய்த்து, 5 நிமிடம் கழித்து ஈரத்துணியால் துடைத்து எடுங்கள். பிசுபிசுப்பு நீங்கி பளிச்சென்று ஆகிவிடும். மேலும் அந்த இடம் புதிது போல இருக்கும்.
இனி எலுமிச்சை தோலைக் குப்பையில் போடுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள். காசு செலவில்லாமல் வீட்டைச் சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக்கொள்ள இந்த எளிய வழிகளை இன்றே முயற்சி செய்து பாருங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.