Breakfast Dishes: மிச்சமான சாதத்தை வீணாக்காமல், காலையிலேயே சட்டுப்புட்டுனு அசத்தலான 5 டிபன் வகைகளாக எப்படி மாற்றுவது அதுவும் 10 நிமிடத்தில் எப்படி என்பதை பார்ப்போம்.
ராத்திரி மிச்சமான சாதத்தை என்ன செய்வது என்று இனி யோசிக்க வேண்டாம். கொஞ்சம் கிரியேட்டிவா யோசிச்சா, சாப்பாடு வீணாகாமல் 10 நிமிடத்தில் சுவையான காலை உணவை ரெடி பண்ணிடலாம். உங்க வீட்டு பழைய சாதத்தை வச்சு இந்த 5 ரெசிபிகளையும் ட்ரை பண்ணிப் பாருங்க.
26
வெஜிடபிள் ரைஸ் சீலா
தினமும் தோசை, அடை சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இது ஒரு புது விதமானதாக இருக்கும். சாதத்துடன் ரவை, தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்தால் மொறுமொறுப்பான 'சீலா' தயார். இதற்கு தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியோடு சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.
36
சீஸ் ரைஸ் பால்ஸ்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ். சாதத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, சீஸ், சோளம், மிளகுத்தூள் மற்றும் ஒரிகானோ சேர்த்து சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இதை பிரெட் தூளில் புரட்டி, ஏர் ஃப்ரை அல்லது லைட்டாக எண்ணெயில் பொரித்து எடுத்தால், வெளிய கிரிஸ்பியா உள்ளே சீஸியா சூப்பரா இருக்கும். குறிப்பாக இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
காலை டிபனுக்கும் சரி, மாலை நேர டீ டைமிற்கும் சரி... ஒரு பர்ஃபெக்ட் சாய்ஸ். சாதத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பிரெட் தூள், காய்கறிகள், கொத்தமல்லி மற்றும் மசாலாக்களை சேர்த்து கட்லெட் வடிவில் தட்டிக்கொள்ளவும். இதை ஷாலோ ஃப்ரை அல்லது ஏர் ஃப்ரை செய்து, தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் தொட்டுச் சாப்பிடலாம்.
56
வெறும் 10 நிமிடத்தில் லெமன் ரைஸ்
வெறும் 10 நிமிடத்தில் ஆபீஸ் அல்லது ஸ்கூல் லஞ்ச் பாக்ஸிற்கு பேக் செய்யக்கூடிய ஈஸி ரெசிபி. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வேர்க்கடலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும். இதில் மிச்சமிருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி, இறக்கும் போது பிரெஷ்ஷான எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கினால், சுவையான லெமன் ரைஸ் தயார்.
66
மசாலா ஊத்தப்பம்
சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஹெல்தி டிபன். சாதத்துடன் தயிர் மற்றும் கொஞ்சம் ரவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை தோசையாக ஊற்றி, அதன் மேல் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி தூவி மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஊத்தப்பம் ரெடி. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.