நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு மனிதர்களுக்கு தூக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். ஒருவர் நிம்மதியான தூக்கம் பெறவில்லை என்றால், பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டி இருக்கும். பெரும்பாலும் பகல் முழுவதும் வேலை பார்த்து விட்டு, இரவு நேரம் வந்தவுடன் தூங்க சென்று விடுவோம்.
ஆனால், இன்றைய கால கட்டத்தில் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும், வீட்டில் இருந்து வேலை (ஒர்க் பிரம் ஹோம்) செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவது ஒரு நாளில் வேலை செய்யும் நேரத்தை அதிகரித்துள்ளது.இதனால் தூங்கும் நேரத்தில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
37
Health Problem
பொதுவாக தூக்கம் ஒருவரின் வாழ்கை முறை பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது. ஒருவர் அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருப்பது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, மன அழுத்தம், பொருளாதார சிக்கல், காபி மற்றும் தேநீரை அதிக அளவில் பருகுவது போன்றவை நாம் தூக்கம் தொலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.