எண் 3 (எந்த மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
மாணவர்களுக்கு கல்விக்கு ஏற்ப வேலை கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பதற்றமும், எரிச்சலும் ஏற்படும். இன்று எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்காமல் இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே பணப் பிரச்னையால் மனக்கசப்பு ஏற்படும். மன உளைச்சல் ஏற்படும்.