Numerology Palangal: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று தயிர் தானம் செய்வது நல்லது.!

First Published | Oct 20, 2022, 6:05 AM IST

Today Numerology Predictions Palangal: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, (20 அக்டோபர் 2022)  ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணித பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எந்த மாதம், எந்த ஆண்டு பிறந்தவராயின் இந்த பலன்கள் உங்களுக்கு பொருந்தும்.

எண் 1 (எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று குடும்பம் தொடர்பான எந்த முக்கிய விஷயத்திலும் உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். இதன் காரணமாக உங்கள் உறவும் மோசமடையலாம். மூன்றாவது நபருடன் தொடர்பு கொள்ள வேண்டாம். உங்கள் வேலையைப் பற்றி அதிகம்  சிந்திக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும்.


எண் 2 (எந்த மாதத்திலும் 2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வீட்டு மூத்த உறுப்பினர்களின் வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் புறக்கணிக்காதீர்கள். அவற்றைப் புறக்கணிப்பது உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும். மூன்றாவது நபரின் குறுக்கீடு காரணமாக சில வேலைகள் தடைபடலாம். வியாபார நடவடிக்கைகள் சாதாரணமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

Tap to resize

எண் 3 (எந்த மாதத்திலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்களின் சில முக்கியமான வேலைகள் நடக்க பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும். தொழிலில் கவனமாக இருங்கள். ஏனெனில், உணர்ச்சிவசத்தால் நீங்கள் தவறான நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் முக்கியமான விஷயங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக தற்போதைய செயல்களில் கவனம் செலுத்துங்கள். 

 மேலும் படிக்க Numerology Palangal: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று யோகம் பிறக்கும்..!

எண் 4 (எந்த மாதத்திலும் 4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு நல்லிணக்கத்தால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் தொழில் சம்பந்தமான சில நல்ல செய்திகளைப் பெறலாம். பிறர் விஷயங்களில் தலையிடுவதை விடுத்து சொந்த வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.  மனைவியுடன் உறவு இனிமையாக இருக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

எண் 5 (எந்த மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்களுக்குப் பிடித்தமான வேலையில் சிறிது நேரத்தைச் செலவிடுவது மன அமைதியை தரும். உங்களின்  சாதனையால் வீட்டிலும், சமூகத்திலும் மதிக்கப்படுவீர்கள். இந்த நேரம் உங்கள் வெற்றியைக் கண்டு சிலர் பொறாமைப்படுவார்கள். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் இருக்கும்.  

எண் 6 (எந்த மாதத்திலும் 6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

வீட்டைப் பராமரித்தல் தொடர்பான வேலைகள் நிறைய இருக்கும்.  இளைஞர்கள் தங்கள் எதிர்காலத் திட்டங்களைச் செயல்படுத்தும் முன் அனுபவமுள்ள ஒருவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். தொழில் ரீதியாக நேரம் மிகவும் சாதகமாக இல்லை. திருமண வாழ்வில் இனிமை இருக்கும். மாறிவரும் காலநிலை காரணமாக இருமல், சளி பிரச்சனை அதிகரிக்கும்.

எண் 7 (எந்த மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

கிரகங்களின் நிலை மிகவும் சாதகமாக இருக்கும். வீட்டில் அமைதியான சூழல் இருக்கும். குழந்தைகளுடன் சிறிது நேரம்செலவிடுவதால், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இன்று உங்கள் வார்த்தைகளை யாராவது தவறாகப் பயன்படுத்தக்கூடும். உங்கள் கவனக்குறைவால், உடல் நலத்தில் பிரச்சனைகள் வரலாம்.

எண் 8 (எந்த மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பான செயல்களில் முழு கவனம் செலுத்துவார்கள். முதலீடு தொடர்பாக யாருடைய பேச்சையும் கேட்காதீர்கள். கணவன்-மனைவி இடையே நல்லிணக்கம் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

 மேலும் படிக்க Numerology Palangal: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று யோகம் பிறக்கும்..!

எண் 9 (எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

எந்த முடிவையும் எடுக்கும்போது எச்சரிக்கையுடன் எடுங்கள். இந்த நேரத்தில், அதிக முயற்சி மற்றும் குறைந்த நன்மைக்கான சூழ்நிலை இருக்கும். இன்று உங்கள் பிடிவாதத்தால் உங்களை நீங்களே காயப்படுத்துவீர்கள். எந்தவொரு வணிக முடிவையும் எடுப்பதற்கு முன், அனுபவமுள்ள ஒருவரை அணுக வேண்டும். கணவன்-மனைவி இடையே தனிப்பட்ட பிரச்சனைகளால் மனக்கசப்பு ஏற்படும்.

Latest Videos

click me!