இன்றைய 12 ராசிகளின் பலன்.! கும்பம் ராசிக்கு ஆசை நிறைவேறும்..துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

Published : Oct 20, 2022, 05:03 AM IST

Horoscope Today- Indriya Rasipalan October 20th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (20/ 10/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

PREV
112
இன்றைய 12 ராசிகளின் பலன்.! கும்பம் ராசிக்கு ஆசை நிறைவேறும்..துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:

இன்றைய நாளின் பெரும்பகுதி குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் செலவிடப்படும். இன்று உங்கள் திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கான சரியான நேரமாகும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மூன்றாவது நபரை தலையிட அனுமதிக்காதீர்கள். ஏனெனில், ஒருசில முடிவுகள் தவறாக மாறிவிடலாம், அதனால் உங்கள் மனம் ஏமாற்றமடையும். உங்கள் விருப்பங்களை நிறைவேறுவதற்கு பெரிய அளவில் ரிஸ்க் தேவையில்லை.

212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்:

சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். இன்றைக்கு நாள் சிறப்பாக இருக்கும். புதிய வழிகளில் பிச்சனைகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் சில பிரச்சனைகள் வரலாம். அதை சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டும். செலவுகளை குறைக்க வேண்டும் இல்லையெனில் நிதி பிரச்சனைகள் வரலாம். இளைஞர்கள் வேலை தொடர்பான விஷயங்களில் வெற்றியைப் பெறலாம்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்..ரிஷபம் ராசிக்கு காரியம் கைக்கூடும், கும்பம் ராசிக்கு யோகம்!உங்கள் ராசிக்கு என்ன பலன்

312
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்:

நீண்ட நாள் தடைபட்ட வேலைகள், இன்று நிறைவடையும். அது உங்களுக்கு வெற்றியை தரும். வாகனம் வாங்கும் போது, சில இடையூறுகள் வரலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அனுபவம் வாய்ந்த நபரிடம் ஆலோசனை பெறவும். தவறான செயல்களைச் செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களிடம் வியாபாரம் தொடர்பான ஆலோசனை  பெறுங்கள்.

412
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்:

இன்று உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். நெருங்கிய நண்பருடனான சந்திப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும். குடும்பப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதால் நிம்மதியும், ஆறுதலும் கிடைக்கும். உங்களுக்கு இன்று நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.

512
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்:

 சொத்து வாங்குவதற்கு, முதலீடு செய்ய இது சாதகமான நேரம் ஆகும். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்வீர்கள். மதிய நேரத்திற்கு பிறகு ஏதேனும் அசுப செய்திகள் கிடைத்து மனம் ஏமாற்றமடையும். மனதளவில் சற்று ஏமாற்றம் அடைவீர்கள். யாருடைய சண்டையிலும் ஈடுபடாதீர்கள்.  பேச்சில் நிதானத்துடன் செயல்படுங்கள். உங்கள் ஆசைகளை நிறைவேற்றி கொள்ள சுயநலமாக செயல்படுவீர்கள்.

612
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி:

இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வர வாய்ப்பு உண்டு. கெட்ட விஷயங்களை பற்றி சிந்தித்து மன அழுத்தத்த்தில் இருக்க வேண்டாம்.உறவினர்களின் வார்த்தைகள்  உங்களை புண் படுத்தும். இந்த நேரத்தில், மற்றவர்களின் பேச்சில் கவனம் செலுத்தாமல், உங்கள் சொந்த திறமையில் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்று காதல் விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம்.

712
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்:

சொத்து, வீடு வாங்கினால் இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் திட்டம் இருக்கும். சமூக நடவடிக்கைகளில் உங்களின் செயல்திறன் இருக்கும். மதிய நேரத்திற்கு பிறகு கிரக நிலையில் மாற்றம் ஏற்படும். பக்கத்து வீட்டாருடன், சண்டை சச்சரவுகள் வரலாம்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்..ரிஷபம் ராசிக்கு காரியம் கைக்கூடும், கும்பம் ராசிக்கு யோகம்!உங்கள் ராசிக்கு என்ன பலன்

812
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்:

இன்று நீங்கள் எதிர் பார்க்காத நபரின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுங்கள். அவசர முடிவுகள் உங்களை தவறான பாதையில் கொண்டு செல்லும்.  உங்கள் வேலையை புத்திசாலித்தனமாக செய்யுங்கள். உறவினர் அல்லது நெருங்கிய நபரின் வார்த்தைகள் உங்களுக்கு மோசமாக இருக்கலாம். இப்போது நேரம் உங்களுக்கு சாதகமாக இல்லை. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.

912
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு:

குடும்பத்தில் புதிய விருந்தினரின்வருகை இருக்கும். வாழ்க்கையை நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். ஒரு சிறப்பு நபருடன் ஒரு சந்திப்பு  இருக்கலாம். விரைவான வெற்றியைப் பெறுவதற்காக தவறான வழிகளைப் பயன்படுத்த வேண்டாம். இல்லையெனில் அது உங்கள் வாழ்க்கையை  கெடுத்துவிடும்.  

1012
rasi palan

மகரம்:

வீட்டைப் பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகள் திட்டமிடப்படும். இறைவனின் ஆசீர்வாதத்தால் சரியான வெற்றியை அடைவீர்கள்.  போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சாதகமான நேரம் இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிறர் தலையிடவோ அல்லது அவர்களின் ஆலோசனையை வழக்கவோ அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். உங்கள் பேச்சு பிறரை புண் பட செய்யலாம்.

1112
rasi palan

கும்பம்:

இன்று உங்கள் மனதில் பலவிதமான சந்தேகங்கள் எழலாம். எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் பல போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். கணவன்-மனைவி இடையே உணர்வுபூர்வமான உறவு நன்றாக இருக்கும்.

1212
rasi palan

மீனம்:

இன்று உங்கள் நேரம் சாதகமாக இருக்கும். அன்றாட வாழ்வில் சில மாற்றங்களைக் கொண்டுவர ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரசியமான செயல்களில் நேரத்தை செலவிடுங்கள். இந்த நேரம் நீங்கள் உங்கள் இலக்கிலிருந்து விலகிச் செல்லலாம். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மனதை கட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலைத் துறையில் முன்னேற்றம் இருக்கும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்..ரிஷபம் ராசிக்கு காரியம் கைக்கூடும், கும்பம் ராசிக்கு யோகம்!உங்கள் ராசிக்கு என்ன பலன்

Read more Photos on
click me!

Recommended Stories