சனி பெயர்ச்சிக்கு மறுநாள் வரும் தீபாவளியால் ..அதிர்ஷ்டத்தை அள்ள காத்திருக்கும் ராசிகள் இவைகள் தான்..!

Published : Oct 19, 2022, 03:16 PM IST

Sani peyarchi 2022: Saturn Transit in October: தீபாவளி நேரத்தில் ஏற்படும் சனி பகவானால், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமி தேவியின் பூரண ஆசீர்வாதம் கிடைக்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.  

PREV
15
சனி பெயர்ச்சிக்கு மறுநாள் வரும் தீபாவளியால் ..அதிர்ஷ்டத்தை அள்ள காத்திருக்கும் ராசிகள் இவைகள் தான்..!

ஜோதிடர்கள் கணிப்பின் படி, சனி பகவானின் மாற்றம்: சனிபகவான் கர்மாவின் கடவுளாக கருதப்படுகிறார். இவர், ஒவ்வொரு ராசிகளின் செயல்களுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை தருகிறார். சனி பகவான் ஒருவருக்கு தன்னுடைய யாரும் மழையை பொழிய துவங்கி விட்டால் யாராலும், தடுக்கவே முடியாது.

மேலும் படிக்க இன்றைய 12 ராசிகளின் பலன்..ரிஷபம் ராசிக்கு காரியம் கைக்கூடும், கும்பம் ராசிக்கு யோகம்!உங்கள் ராசிக்கு என்ன பலன்

25

அதன்படி, சனி கடவுள் இந்த 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் தனது இயல்பு நிலைக்கு மாறவுள்ளார். தீபாவளிக்கு முந்தைய நாள் சனியின் இந்த மாற்றம் நிகழவுள்ளது. ஆகையால், இந்த ஆண்டு தீபாவளி திருநாள் சனியின் இந்த மாற்றம் காரணமாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி நாம் இந்த பதிவில் காணலாம். 

35

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. தொழிலில்  லாபம் பெருகும். சனி பகவானின் அருளும் அன்னை லட்சுமியின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். லட்சுமி அன்னையின் சிறப்பு அருளால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க இது சிறந்த நேரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கௌரவமும் மதிப்பும் உயரும்.

மேலும் படிக்க இன்றைய 12 ராசிகளின் பலன்..ரிஷபம் ராசிக்கு காரியம் கைக்கூடும், கும்பம் ராசிக்கு யோகம்!உங்கள் ராசிக்கு என்ன பலன்

45

துலாம்:

இந்தக் காலத்தில் துலா ராசிக்காரர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். நீதிமன்றத்தின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில்வெற்றி கிடைக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.  காதல் கை  கூடும் யோகம் உண்டு.

55

சிம்மம்: 

சிம்ம ராசிகளுக்கு சனியின் மாற்றம் வெற்றிகளை தரும்.இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் நிறைவேறும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி உறவு சாதகமாக இருக்கும்.அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும். 

Read more Photos on
click me!

Recommended Stories