Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
ரிஷபம்:
இந்த நாளின் தொடக்கத்தில் உங்கள் முக்கியமான வேலைகளுக்கு தேவையான ஏற்பாட்டினை திட்டமிடுங்கள். பிற்பகல் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் அதீத தன்னம்பிக்கை மற்றும் ஈகோ நண்பர்களுடன் மோசமான உறவுக்கு வழிவகுக்கும். வீட்டின் பெரியவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவண் தேவை. உங்கள் வீட்டில் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடுங்கள். தோள்பட்டை வலி தசை வலி உங்களுக்கு இருக்கலாம்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மிதுனம்:
இந்த நேரம் உங்களது திறமையை வெளிப்படுத்தும் நேரமாகும். தற்போதைய கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்றைய நாள் லாபகரமான சூழ்நிலை உங்களுக்கு இருக்கும். நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கும். புதிய திட்டங்களை உடனடியாகத் தொடங்க முயற்சிக்கவும். உங்கள் விஷயத்தில் வெளியாட்களின் குறுக்கீடும் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். பணியிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். திருமணத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கடகம்:
மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு இருக்கும். பிற்பகல் நிலைமை உங்களுக்கு அதிக நன்மையான இருக்கலாம். உங்களுக்கு சில தேவையற்ற செலவுகள் வரும். அதனால், எதிலும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் கோபமான குணத்தால் நண்பருடனான உறவை நீங்கள் கெடுக்கலாம். உங்களின் காதல் உறவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்:
கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரம் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப சரியான பலனைப் பெறலாம். சொத்து சம்பந்தமான வேலையும் இருக்கலாம். இந்த நேரம் முடிவுகளை எடுக்கும் போது, கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். உங்களின் தற்போதைய சூழ்நிலையில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்குக் கீழே பணிபுரியும் ஊழியர்களுக்குள் சிறு வாக்குவாதம் ஏற்படலாம். கணவன்-மனைவியின் வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.வேளையில் உங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துங்கள். பணம் செலவு வைக்கும். சில நேரங்களில் உங்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு மற்றவர்களுக்கு சிக்கலைஏற்படுத்தும். எனவே உங்கள் சிந்தனையில் கவனமுடன் இருங்கள். கணவன்-மனைவி இருவரும் தங்கள் அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பார்கள்.
துலாம்:
இன்று வெளியில் சென்று வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள் திட்டமிட்ட முறையில் பணிகளை முடிக்கவும். மனதிற்கு ஏற்றவாறு பலன் கிடைப்பதால் மனதிற்கு மகிழ்ச்சியும், வருமானமும் கூடும். சோம்பேறித்தனம் உங்களை ஆள விடாதீர்கள். அதன் காரணமாக ஒரு சிறிய வெற்றி கையை விட்டு நழுவிவிடும். அதேபோன்று, மனதில் கோபமும் எரிச்சலும் ஏற்படும். இந்த நேரத்தில் எந்த ஒரு வியாபாரம் தொடர்பான விஷயத்திலும் மற்றவர்களை நம்ப வேண்டாம். மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
விருச்சிகம்:
உங்கள் அன்றாட வழக்கத்தில் நீங்கள் செய்ய முயற்சிக்கும் செயல் வெற்றியாக முடியும். சொத்து பரிவர்த்தனைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம். சில பழைய எதிர்மறையான விஷயங்களை எதிர்கொள்வது நெருங்கிய உறவினருடனான உறவை அழிக்கக்கூடும்.
தனுசு:
இன்று வீட்டில் சில புதுப்பித்தல் மற்றும் அலங்காரங்கள் பற்றிய விவாதங்கள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே உற்சாகமான சூழல் நிலவும். எந்த வேலையும் செய்வதற்கு முன் கவனமுடன் இருங்கள். இல்லையென்றால் நஷ்டம் ஏற்படும். நெருங்கிய உறவினருடன் சச்சரவுகளால் மனக்கசப்பு ஏற்படும். இன்று பணியிடத்தில் உங்களுக்கு வேலை அதிகமாக இருக்கலாம். உங்களின் மன அழுத்தம் உங்கள் செரிமான செயல்பாட்டை பாதிக்கும்.
rasi palan
கும்பம்:
சந்ததியினரால் தொடரும் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பது நிம்மதி தரும். உங்கள் தனிப்பட்ட பணிகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். இந்த நேரம் உங்களுக்கு செலவுகள் வந்து சேரும். எனவே உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தற்போதைய வியாபாரத்தில், நடந்து கொண்டிருக்கும் வேலையில் புதிய வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உங்களுக்கு இருக்கும்.