இந்த தீபாவளிக்கு உங்கள் வீடு மாளிகை போல் ஜொலிக்க வேண்டுமா..? இதோ கம்மி பட்ஜெட்டில் சூப்பர் டிப்ஸ் இருக்கு..!

First Published Oct 12, 2022, 12:11 PM IST

Diwali 2022 decoration: தீபாவளி நாட்களில் நம்முடைய வீடுகளை அலங்காரத்தில் ஜொலிக்க வைக்க, தேவையான உதவி குறிப்புகளை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம். 

தீபாவளி வந்துவிட்டாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என புத்தாடை, வெடிச் சத்தம், இனிப்புகள் என கலகலக்கும். தீபாவளி நாட்களில் நாம் தினமும் குளித்து முடித்து விட்டு புது துணி போட்டு கொண்டால் போதுமா..? நம்முடைய வீடுகளும் அலங்காரத்தில் ஜொலிக்க வேண்டுமா..? அதற்கு தேவையான உதவி குறிப்புகளை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம். 


வண்ணமயமான விளக்குகள்:

காகிதத்தால் செய்யப்பட்ட வண்ணமயமான விளக்குகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அவை ஒளிரும் போது அதிக வண்ணங்களைப் பரப்பக்கூடியன. இதை உங்கள் தீபாவளி அலங்கார யோசனையாகப் பயன்படுத்தி, உங்கள் வீட்டை விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியுடன் ஒளிரச் செய்யுங்கள்.

அலங்காரக் கிண்ணங்கள்:

உங்கள் வீட்டின் வரவேற்ப்பு அறையில் அல்லது பூஜை அறையில் அலங்கார  கிண்ணத்தில்  தண்ணீரில் நிரப்பி, பூக்கள் மிதக்க விட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்படி, செய்வது உங்கள் வீட்டினை அலங்கரிப்பதுடன், உங்கள் வீட்டிற்கு வருவோரின் கண் திருஷ்ட்டி இருக்காது. இதனால், வீடு நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

ரங்கோலி ஹோல்டர்கள்:

வண்ணமயமான ரங்கோலி கோலம் போடுவது, தீபாவளி நாட்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். உங்கள் ரங்கோலிக்கு இடையில் இந்த டீலைட் ஹோல்டர்களை ஒளிரச்  செய்யவும். அவற்றை மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றவும் இது உதவுகிறது.  இந்த அழகான ஹோல்டர் பல வண்ண மற்றும் மலர் வடிவமைப்புடன் வருகிறது. 

எல்.இ.டி விளக்குகள்:

இன்றைய நாட்களில் பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டம் போன்ற விழாக்கள் அனைத்தும் எல்.இ.டி விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. அதேபோன்று, தீபாவளி நாட்களிலும் நம்முடைய வீடு ஜொலிக்க வேண்டும் என்றால்..?  எல்இடி விளக்குகள் பயன்படுத்துங்கள். இது வாட்டர் ப்ரூஃப் டிசைனுடன் வருவதால், உள்ளேயும், வெளியேயும் மழைக்காலத்திலும் நீங்கள் பயன்படுத்தலாம். மேலும், இந்த எல்இடி விளக்குகள் அதிக வெப்பம் காரணமாக வெடித்துவிடும் என்கிற ஆபத்து இல்லை.

 மேலும் படிக்க...தீராத பிரச்சனையை தீர்த்து வைக்க..தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்பு வைத்து, இந்த ஒரு பரிகாரம் செய்தால் போதும்..

மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள்:

வண்ணமயமான மெழுகுவர்த்தியை அலங்கரிக்க, மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகளும் தேவை. பித்தளையால் செய்யப்பட்ட பல்வேறு வகையான மெழுகுவர்த்திகள் குறைந்த விலையில், பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.

கேன்வாஸ் ஓவியங்கள்:

திரைப்படங்கள் அல்லது பத்திரிகைகளில் சுவர்களை அலங்கரிப்பதில் கேன்வாஸ் ஓவியங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஒரு கேன்வாஸ், ஆயில் அல்லது வாட்டர்கலர் பெயிண்டிங் உங்களை எல்லாவற்றிலும் வித்தியாசமாக நிற்க வைக்கும். நீங்கள் கலையில் சிறந்த ரசனை கொண்டவர் என்பதை இது காட்டுகிறது.

 மேலும் படிக்க...தீராத பிரச்சனையை தீர்த்து வைக்க..தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்பு வைத்து, இந்த ஒரு பரிகாரம் செய்தால் போதும்..

click me!