ஒரு புறம் மருத்துவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், 10 மாதங்களுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகள், மருத்துவ சான்றிதழ்கள் உள்ளிட்ட பல விதிகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள். மேலும், திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அது சட்டப்படி குற்றமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.